செய்திகள்

குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய 30 ஆண்டு தலைமறை குற்றவாளிகள் கைது

சென்னை, ஜூலை 2-– இந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு, அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பைப் குண்டு’ வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். கடந்த 1995-ம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு, நாகூரில் தங்கம் முத்துகிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கு, 1999-ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், […]

Loading

செய்திகள்

இந்தியாவுடன் எல்லை நிர்ணயம் குறித்து விவாதிக்கத் தயார்: சீனா அறிவிப்பு

பெய்ஜிங், ஜூலை 1– இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து விவாதங்களில் ஈடுபட்டு எல்லையில் அமைதியை நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு, சீனாவின் துறைமுக நகரான கிங்டாவோவில் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. மாநாட்டுக்கிடையே, சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன்னை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். எல்லைகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட சிக்கலான பிரச்சினைகளை […]

Loading

செய்திகள்

ஆனித்திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம், ஜூலை 1 சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. விழாவின் 9ம் நாளான இன்று தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிற்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் […]

Loading

செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிர்வாகத்தில் இன்று முதல் பல்வேறு மாற்றங்கள் அமல்

துபாய், ஜூலை 1– ஐக்கிய அரபு அமீரகத்தில் நிர்வாக நடைமுறைகள் அனைத்தும் இன்றுமுதல் டிஜிட்டல் முறைக்கு மாற்றங்கள் செய்யப்பட்டு அனைத்தும் எளிமைபடுத்தப்பட உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், குடியிருப்பாளர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நிர்வாகத்தை எளிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன. முதலாவதாக, விசா நடைமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட உள்ளது. புதிய டிஜிட்டல் மாடல் மூலம் ஆவண சரிபார்ப்பு, விண்ணப்ப செயல்முறை விரைவாக முடியும். புதிய வசதிகள் மூலம் குடியிருப்பாளர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் தடையின்றி சமர்ப்பித்து, […]

Loading

செய்திகள்

அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் மஸ்க் தென் ஆப்ரிக்காவுக்கே ஓடியிருப்பார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் தாக்கு வாஷிங்டன், ஜூலை 1– மானியங்கள் இல்லாவிட்டால், எலான் மஸ்க் தனது தொழில்களை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்பச் சென்றிருப்பார்” என்று டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அரசின் மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் இல்லையென்றால், எலான் மஸ்க் தனது சொந்த நாடான தென் ஆப்ரிக்காவுக்கே திரும்பச் சென்றிருப்பார் […]

Loading

செய்திகள்

2024-–25ல் ரூ.22.08 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய்

புதுடெல்லி, ஜூலை.1- கடந்த 2024-–25ல் ஜி.எஸ்.டி. வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.22.08 லட்சம் கோடியை எட்டி, முந்தைய ஆண்டை விட 9.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன. மாதந்திர ஜி.எஸ்.டி. வசூல், கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கோடி கிடைத்தது. மே […]

Loading

செய்திகள்

10வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா: வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, ஜூலை 1– டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 1) டிஜிட்டல் இந்தியா திட்டம் துவங்கப்பட்டது. பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம் என்பது, நாட்டை டிஜிட்டல் துறையில் ஆற்றல் மிக்க ஒன்றாகவும், அறிவுசார் சமூகமாகவும் மாற்ற வேண்டும் என்பதே ஆகும். 10 ஆண்டுகள் […]

Loading

சிவகாசி வெடி விபத்து
செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 7 பேர் பலி

விருதுநகர், ஜூலை 1– சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி – சாத்தூர் இடையே உள்ள சின்னகாமன்பட்டியில் கமல் குமார் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று கோகுலேஸ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் 50- […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ. 840 உயர்வு

சென்னை, ஜூலை 1– தங்கம் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து சவரன் 72 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.840 உயர்வு இதனையடுத்து, தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 5 நாட்களாக குறைந்த தங்கம் விலை […]

Loading

செய்திகள்

தெலங்கானா மாநில இரசாயன ஆலை வெடிவிபத்தில் பலியானோர் 38 ஆக உயர்வு

ஐதராபாத், ஜூலை 1– தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி அருகே உள்ள 3 மாடி இரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 43 தொழிலாளர்கள் இன்னும் காணவில்லை. தெலுங்கானா மாநிலம் பஷ்மைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் பல மாடி கட்டிடங்கள் இடிபாடு அடைந்து குவியலாக மாறியது. இதில் 10 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் மீட்பு பணிகள் […]

Loading