செய்திகள்

ரூ.1,853 கோடியில் பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலை: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி, ஜூலை 2– ரூ.1,853 கோடி மதிப்பிலான பரமக்குடி– ராமநாதபுரம் 4 வழிச்சாலை கட்டுமானத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்காக பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 4 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் ஒன்று, தேசிய விளையாட்டுக்கொள்கை–2025. 2–வது ரூ.1 லட்சம் கோடி நிதியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமை (ஆர்.டி.ஐ.) திட்டம். 3–வது வேலைவாய்ப்புடன் […]

Loading

செய்திகள்

திருப்புவனத்தில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இணைந்து ஆர்ப்பாட்டம்

திருப்புவனம், ஜூலை 2– அஜித்குமாரின் படுகொலைக்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் இன்று அண்ணா தி.மு.க. – பாஜக இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினர் நடத்திய மிருகத்தனமான தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் படுகொலையின் பின்னணியில் உள்ள திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தியும், அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இன்று சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு நாள் விழா : பள்ளி மாணவர்களுக்கு 4ந் தேதி சென்னையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

சென்னை, ஜூலை 2– முதலமைச்சரால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18–ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இவ்வறிவிப்பிற்கு இணங்க 2022–ம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நாள் விழா தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும், 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல் மூன்று பரிசுகள் மாவட்ட […]

Loading

செய்திகள்

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: 2 நாட்களில் ரூ.1200 அதிகரித்தது

சென்னை, ஜூலை 2– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1200 அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து கொண்டு செல்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து, பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில் கடந்த 14ந்தேதி வரலாறு […]

Loading

செய்திகள்

சென்னை மெட்ரே ரெயில்களில் ஜூன் மாதம் 92.19 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜூலை 2– சென்னை மெட்ரோ இரயில்களில் ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி […]

Loading

செய்திகள்

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்: டிரம்ப்

வாஷிங்டன், ஜூலை 2– காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம்’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எனது பிரதிநிதிகள் இன்று காசா தொடர்பாக இஸ்ரேலியர்களுடன் பயனுள்ள சந்திப்பை நடத்தினர். காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது, அதே நேரத்தில் […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

சென்னை, ஜூலை.2- சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-– இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களையும், அவர்களது […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் கலைப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை, ஜூலை 2– தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்ற காவலில் […]

Loading

செய்திகள்

மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு ‘நீட்’ மறுதேர்வு

இந்தூர், ஜூலை.2- நீட் தேர்வின்போது மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மத்திய பிரதேச ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு கடந்த மே 4ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். அதன்தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன. இதற்கிடையே மத்தியபிரதேச மாநிலம் இந்தூர், உஜ்ஜயின் உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதிய சில மாணவர்கள், மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தூர் கிளையில் வழக்கு […]

Loading

செய்திகள்

5 நாடுகளு“ வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி, 2 ரதமர் மோடி இன்று முதல் 9ந்தேதி வரையிலான 8 நாட்களில் பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்நிலையில் 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், பிரதமரின் இந்த நீண்டகால பயணம் அமைகிறது. இதன்படி அவர் 2 கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு செல்கிறார்.இந்த பயணத்தில் […]

Loading