செய்திகள்

ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்கும் இந்தியா

பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் புதுடெல்லி, ஜூலை.4-– ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இந்தியா வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய முப்படைகளை வலுப்படுத்த மிகப்பெரிய அளவில் ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. அந்தவகையில் 10 மிகப்பெரிய கொள்முதல் பரிந்துரைகளுக்கு ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ கெள்முதல் கவுன்சில் கூட்டத்தில் மொத்தம் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு ஒப்புதல் […]

Loading

செய்திகள்

10, 15 ஆண்டுகள் ஆன வாகனங்களுக்கு டீசல், பெட்ரோலுக்கு விதித்த தடை நீக்கம்

டெல்லி, ஜூலை 4– டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்ற உத்தரவு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, காற்று மாசு அதிகரிப்பதற்கு பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக உள்ளது. இதன் காரணமாக, 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த […]

Loading

செய்திகள்

குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையின் உடல்

வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய் அரியலூர் அருகே நடந்த பரபரப்பு சம்பவம் அரியலூர், ஜூலை 4– குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையின் உடலை தெரு நாய் வாயில் கவ்வி கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ். மாத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள குப்பை மேட்டில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்துள்ளது. […]

Loading

செய்திகள்

ஜப்பானில் 2 வாரங்களில் மட்டும் 900 முறை நில நடுக்கம் பதிவு

டோக்கியோ, ஜூலை 4– ஜப்பானின் டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த 2 வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஜப்பானின் தெற்கு பகுதியிலுள்ள டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த 2 வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் 183 நிலநடுக்கம் இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “ஜூன் 21 முதல் தொடங்கிய […]

Loading

செய்திகள்

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு: மேலும் 2 பேர் கைது

சென்னை, ஜூலை 4– நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே தனக்கு ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்து […]

Loading

செய்திகள்

அஜித்குமார் தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு

சிவகங்கை, ஜூலை 4– அஜித்குமார் தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை […]

Loading

செய்திகள்

வெளியுறவுத்துறை இணை செயலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு

நாகர்கோவில், ஜூலை. 4- போர் சூழ்நிலை காரணமாக ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என வெளியுறவுத்துறை இணை செயலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை மனு கொடுத்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று டெல்லியில் வெளியுறவு துறை இணை செயலாளர் ஆனந்த் பிரகாஷை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஈரான் […]

Loading

செய்திகள்

காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை: கெஜ்ரிவால் திட்டவட்டம்

ஆமதாபாத், ஜூலை.4-– காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை என கெஜ்ரிவால் திட்டவட்டமாக கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வெற்றிப் பெற்று வந்த ஆம் ஆத்மி, இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தது. இதனால் பின்னடைவை சந்தித்து இருந்த ஆம் ஆத்மிக்கு, சமீபத்தில் பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி புதிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது. குறிப்பாக பஞ்சாப்பில் இடைத்தேர்தல் நடந்த ஒரு தொகுதியையும், குஜராத்தில் 2 தொகுதிகளில் நடந்த தேர்தலில் ஒரு […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

ஆவடி, ஜூலை 4– ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவுபடியும், காவல் கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி உத்தரவுபடியும், அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவி உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் படியும் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு எல்லைக்குட்பட்ட மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா என்னும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை […]

Loading

செய்திகள்

19-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி, ஜூலை.4- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந்தேதி தொடங்கவுள்ள நிலையில், வருகிற 19-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா பதிலடி கொடுத்த விவகாரம், இந்த விஷயத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துச்சொன்னது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் […]

Loading