செய்திகள்

டெக்சாஸில் பெய்த கனமழை, வெள்ளம்: 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி

டெக்சாஸ், ஜூலை 7– அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 குழந்தைகள் உள்பட 80 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 28 குழந்தைகள் உட்பட 80 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரம் கெர் கவுண்டியில் பெய்த கனமழை […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னை, ஜூலை 7– தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.400 குறைவு இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் […]

Loading

செய்திகள்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ட்ரோன் மூலம் புனித நீர் தெளிப்பு தூத்துக்குடி. ஜுலை. 07 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர கோஷம் எழுப்பினார்கள். விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், திருவாவடுதுறை மற்றும் தர்மபுரம் ஆதின மடாதிபதிகள் பங்கேற்றனர். முருகப்பெருமானின் 6 படைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி […]

Loading

செய்திகள்

மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் வழங்கப்படும்: ரஷ்யா

மாஸ்கோ, ஜூலை 7– ரஷ்யாவில் மாணவிகள் குழந்தை பெற்றுக் கொண்டால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவின் மக்கள் தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை அதிகரிக்க ரஷ்யாவின் சில பகுதிகளில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, படிக்கும் மாணவிகள் குழந்தை பெற்று கொண்டால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது. ரூ. 1 லட்சம் பரிசு அதன் […]

Loading

செய்திகள்

தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜூலை 7– இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தனித்துவமான ஆளுமை இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

அத்திப்பழம் சாப்பிட்டால் உடல் ரத்தக் கொதிப்பு குறையும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அத்திப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும். எனவே, ஒரு நாளைக்கு நான்கைந்து வேளைகளுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது. உடலில் பொட்டாசியம் குறைவாகவும் சோடியம் அதிகமாகவும் இருந்தால் பிபி அதிகரிக்கும். அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால் பிபி குறையும்.நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் அத்திப்பழம் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவற்றில் நார்ச்சத்து அதிகம். அத்திப்பழத்தில் […]

Loading

செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி

4 பேர் படுகாயம் விருதுநகர், ஜூலை 6– சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தில் ஆலையில் பணியாற்றிய ஒருவர் பலியானார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து […]

Loading

90 வது பிறந்த நாளை கொண்டாடும் தலாய் லாமா
செய்திகள்

மக்களின் மனதில் ஒளிரும் பேரொளி: 90வது பிறந்த நாளைக் கொண்டாடும் தலாய் லாமா!

“அமைதி என்பது வெறும் எதிரிகளை தவிர்ப்பது அல்ல, அது உள்மன அமைதியை அடையும் பயணமாகும்.” – தலாய் லாமா உலக அமைதியின் மாபெரும் தூதராகவும், கருணையும், மத சகோதரத்துவத்தையும் எடுத்துரைக்கும் ஆன்மீக தலைவராகவும் புகழ்பெற்ற தலாய் லாமா, இன்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தரம்சாலா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான பக்தர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக நம்பிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களையும் மரியாதையையும் தெரிவித்துவருகின்றனர். […]

Loading

BRICS
செய்திகள்

‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 6– ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கானா, டிரினிடாட் அண்ட டுபாகோ, அர்ஜென்டினா நாடுகளை தொடர்ந்து 4வது நாடாக, பிரேசிலுக்கு, அந்நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, ​​இந்திய புலம் பெயர்ந்தோர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு […]

Loading

கனமழை
செய்திகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி

நியூயார்க், ஜூலை 6– அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு – மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 32 பேர் வெள்ளத்தில் பலி மேலும் வெள்ளப்பெருக்கு […]

Loading