செய்திகள்

படகுகளில் த.வெ.க பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? – தி.மு.க. அரசுக்கு விஜய் கண்டனம்

சென்னை, ஜூலை 10– மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? என கேள்வி எழுப்பி, தி.மு.க. அரசுக்கு நடிகர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக […]

Loading

செய்திகள்

ஏ.ஐ. மூலம் பாக்டீரியாக்களை அழிக்கும் புரதம்: ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாதனை

மெல்போர்ன், ஜூலை 10– செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்களான ஈ.கோலியை அழிக்கும் ஒரு செயற்கைப் புரதத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. மெல்போர்னைச் சேர்ந்த மோனாஷ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஏ.ஐ.யைப் பயன்படுத்தி ஒரு பயன்படுத்தக்கூடிய உயிரியல் புரதத்தை ஆஸ்திரேலியக் குழு உருவாக்கியது இதுவே முதல் முறை. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் இணைந்து, விரைவான, […]

Loading

செய்திகள்

குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பது அபாயம்: எய்ம்ஸ் ஆய்வு எச்சரிக்கை

ராய்ப்பூர், ஜூலை 10– குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பது அபாயம் என எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கிறது. 5 வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகள் தினமும் சராசரியாக 2.2 மணிநேரம் செல்போன், தொலைக்காட்சி, லேப்டாப் போன்ற திரைகளில் செலவிடுவதாக ராய்ப்பூர் எய்ம்ஸின் அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த திரைநேரம் உலகளாவிய வழிகாட்டுதல்களை விட 2 மடங்கு அதிகம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ‘க்யூரஸ்’ இதழில் வெளியான இந்த ஆய்வு, 2,857 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட 10 ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு […]

Loading

செய்திகள்

வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புதுவை, ஜூலை 10– பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர்திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி 21-ஆம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேர்த் திருவிழா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று காலை நடந்தது. இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற […]

Loading

செய்திகள்

நானே இப்போது பாமக தலைவர்: தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

சென்னை, ஜூலை 10– அன்புமணி பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைந்து விட்டதால், நானே இப்போது பாமக தலைவராக உள்ளேன் என தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், ராமதாஸ் தானே கட்சியின் தலைவர் என்று உறுதிப்படுத்தியதாகவும், அன்புமணியின் செயல்பாடுகளால் கட்சியில் […]

Loading

செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை

விழுப்புரம், ஜூலை 10– விழுப்புரத்தில் 17 தூய்மை பணியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவி மற்றும் 105 தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தூய்மைப்பணியாளர்களின் பணி அர்ப்பணிப்பு மிக்க பணியாக உள்ளது. குறிப்பாக, கொரோனா போன்ற போிடர் காலத்தில், தங்கள் உயிரை துச்சமென எண்ணி தூய்மைப்பணியினை சிறப்பாக மேற்கொண்டு […]

Loading

செய்திகள்

மதுரை – தூத்துக்குடி 4 வழி சாலையில் லாரியும் வேனும் மோதல்: 3 பேர் பலி

விருதுநகர், ஜூலை 10– அருப்புக்கோட்டை அருகே லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் மற்றும் கிளீனர் என 3 பேர் உயிரிழந்தனர். அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி 4 வழிச் சாலையில் இன்று காலையில் நிகழ்ந்த கோர விபத்தில், கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 3 பேர் பலி இந்த விபத்தில் 2 வாகனங்களின் ஓட்டுநர்களும், மற்றும் ஒரு கிளினர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே […]

Loading

செய்திகள்

மெரினா நீச்சல் குளம் பராமரிப்புப் பணிகள் எதிரொலி:

சென்னை, ஜூலை 10– மெரினா நீச்சல் குளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (11–ந் தேதி) முதல் 31–ந் தேதி வரை (20 நாட்கள்) இயங்காது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு- 114க்கு உட்பட்ட மெரினா நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தங்குதடையின்றி இயங்க ஏதுவாக, 135 மீ. பேக்வாஷ் குழாய் (Backwash Pipe) அமைத்தல், 1.80 மீ. விட்டம் கொண்ட 9 ஊறுகுழிகள் (Soak […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை, ஜூலை 10– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தவரையில் ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. இந்த ஆண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து, கடந்த ஜூன் மாதத்தில் வரலாறு காணாத உச்சம் தொட்டது. ஆபரணத் தங்கம் விலை ரூ. 74 ஆயிரத்தை கடந்து புதிய வரலாறு […]

Loading

செய்திகள்

இந்திய அரசியலமைப்பின் சக்தி: நமீபிய பார்லிமெண்டில் மோடி பெருமிதம்

விண்டோக், ஜூலை.10- ”ஏழை பழங்குடியினத்தை சேர்ந்த மகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக இருப்பது இந்திய அரசியலமைப்பின் சக்தி. ஏழை குடும்பத்தில் பிறந்த என்னை போன்ற ஒருவருக்கு மூன்று முறை பிரதமராக வாய்ப்பு கிடைத்தது அரசியலமைப்பின் சக்தி,” என நமீபியா பார்லிமெண்டில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார். நமீபியா நாட்டு அதிபர் நண்டி-நதைத்வாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் மோடி கடந்த 2-ந் தேதி முதல் கானா, அர்ஜென்டினா உள்பட 5 நாடுகளில் […]

Loading