செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம், ஜூலை 13– நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நெடுந்தீவுக்கு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை […]

Loading

செய்திகள்

உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

ஐதராபாத், ஜூலை 13– பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) இன்று உடல் நலக்குறைவால் காலமானார். பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். ‘சாமி’ பட வில்லன் கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் […]

Loading

செய்திகள்

திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் தீ விபத்து; ரெயில் சேவைகள் பாதிப்பு

திருவள்ளூர், ஜூலை 13- திருவள்ளூர் அருகே இன்று அதிகாலை டீசல் ஏற்றிய சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ரெயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இன்று காலை 5:30 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே டீசல் நிரப்பப்பட்ட சரக்கு ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதுடன், அதில் ஏற்பட்ட டீசல் கசிவால் தீ பற்றியது. தீ நான்கு முதல் ஐந்து பெட்டிகள் வரை […]

Loading

செய்திகள்

12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம்: துரை வைகோ

கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை: வைகோ திருச்சி, ஜூலை 12– 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம் என்று துரை வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசியலில் தவறு நடப்பது இயல்பு தான். செய்த தவறை (அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் ம.தி.மு.க. வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை, அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ […]

Loading

செய்திகள்

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது

சென்னை, ஜூலை 12– வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. வண்டலூர் அருகே செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், 18 சிறுமிகள், தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விடுதியை உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் […]

Loading

செய்திகள்

இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியதற்கு ஆதாரத்தை காட்ட முடியுமா?

வெளிநாட்டு ஊடகங்களுக்கு அஜித்தோவல் கேள்வி சென்னை, ஜூலை.12–- பாகிஸ்தான் மீதான போர் தொடர்பான உண்மைகளை, வெளிநாட்டு ஊடகங்கள் தவறாக காட்டுகின்றன. இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரத்தை அவர்களால் காட்ட முடியுமா, என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யின் 62-வது பட்டமளிப்பு விழா, கிண்டி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முதன்மை விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், […]

Loading

செய்திகள்

கடலூர் ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்: விசாரணையில் தகவல்

சென்னை, ஜூலை 12– கடலூர் ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த கோர விபத்திற்கு யார் காரணம் என பல பேச்சுக்கள் […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர்

தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என தகவல் சென்னை, ஜூலை 12– தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர் . தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப்-4 பணிகளில் […]

Loading

செய்திகள்

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து

இடிபாடுகளில் 12 பேர் சிக்கித் தவிப்பு புதுடெல்லி, ஜூலை 12– டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் இன்று காலை 4 தலங்கள் கொண்டு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சீலாம்பூர். இந்த பகுதியில் உள்ள ஜனதா மஸ்தூர் காலனியில் அமைந்துள்ள 4 தலங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று காலை 7 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்தத் தகவல் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது: மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, ஜூலை.12- மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதில் அநியாயம் செய்யப்படுகிறது. அதனால் தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள்தொகை தினமான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- உலக மக்கள்தொகை நாளில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல். தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது, பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது. அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது. நீடித்து […]

Loading