செய்திகள்

பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கை வசதி: உத்தரவை நிறுத்தி வைத்தது தமிழக அரசு

சென்னை, ஜூலை 13– பள்ளிகளில் மாணவர் இருக்கை வரிசையை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் சமீபத்தில் வெளியான, ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற திரைப்படம், கடைசி வரிசை இருக்கையில் அமர்வதால், கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருந்தது. அரை வட்ட வடிவில் மாணவர்களின் இருக்கை மாற்றி அமைக்கப்பட்டால், ‘கடைசி பெஞ்ச்’ என்பதே இருக்காது என்றும் அந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக, அம்மாநிலத்தில், ஒரு சில […]

Loading

செய்திகள்

ஏரியில் விளையாடிய 2 சகோதரர்கள் உட்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

அரக்கோணம், ஜூலை 13– அரக்கோணம் அருகே ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் மேட்டு குன்னத்தூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே உள்ள கிராமம் மேட்டு குன்னத்தூர். இந்த ஊரைச் சேர்ந்த சரவணன் மகன் புவனேஸ்வரன் (7), அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.இதே ஊரைச் சேர்ந்த கோபியின் மகன் மோனி பிரசாத்(9), அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு […]

Loading

செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக டிரம்பை கொல்ல டிரோன் தயார்: ஈரான் தலைவரின் ஆலோசகர் பேச்சு

தெக்ரான், ஜூலை 13– டிரம்பை கொல்ல நாங்கள் டிரோன் தயாராக வைத்துள்ளோம் என்று ஈரான் தலைவர் அயதுல்லா கமொனியின் பிரதான ஆலோசகர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்தது. ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள், சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ […]

Loading

செய்திகள்

மதுரவாயலில் போதைப் பொருள் பதுக்கல்: 10 பேர் கைது

சென்னை, ஜூலை 13– போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் நடவடிக்கையால் மதுரவாயல் பகுதியில் போதைப் பொருட்கள் வைத்திருந்த 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில், நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் கண்காணிப்பில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவினர் சென்னை பெருநகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, இது தொடர்பான குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து […]

Loading

செய்திகள்

2035-ல் விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையம்:

குலசேகரம், ஜூலை 13– 2035-ல் விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க உள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். இஸ்ரோ தலைவர் நாராயணன் குலேசேகரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 1984-ல் இந்தியரான ராகேஷ் சர்மா ரஷியா மூலம் விண்வெளிக்கு சென்றார். அதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன. நமது இந்திய மண்ணில் இருந்து ஒரு விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பினால் நிறைய அனுபவங்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் சுபான்ஷூ சுக்லாவை முதலில் அமெரிக்காவில் […]

Loading

செய்திகள்

தி.மு.க.– ‘சாரிம்மா’ மாடல் சர்க்காராக மாறி விட்டது: விஜய் ஆவேச பேச்சு

சென்னை, ஜூலை 13– வெற்று விளம்பர மாடல் தி.மு.க. சர்கார், இப்பொழுது ‘சாரிம்மா மாடல்’ சர்காராக மாறிவிட்டது என சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரடியாக சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதி […]

Loading

செய்திகள்

மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம்: ஜனாதிபதி அறிவிப்பு

புதுடெல்லி, ஜூலை 13– மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ராஜ்யசபாவில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். அதில், கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை, சமூக சேவை, பத்திரிகையாளர் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்து கவுரவித்து வருகிறது. மத்திய அரசின் பரிந்துரையை […]

Loading

செய்திகள்

விஜய் தலைமையிலான ஆர்ப்பாட்டம்: பெண் தொண்டர்கள் பலர் மயக்கம்

சென்னை, ஜூலை 13 தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோருவதற்காகவும், வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் நடத்தப்பட்டது. தவெக ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ‘திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான சமூக நீதி அரசுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Loading

செய்திகள்

46 கோயில்களில் நாளை குடமுழுக்கு விழா:

ஈரோடு, ஜூலை 13– கோயில் திருப்பணிகளை பொறுத்தவரையில், மன்னர் ஆட்சி காலத்தில் நடைபெற்றதை விட திராவிட மாடல் ஆட்சியில் அதிகம் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ஆசியாவிலேயே 186 அடி உயர முருகர் சிலை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இக்கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நேரில் ஆய்வு […]

Loading

செய்திகள்

மக்களை கடனில் தத்தளிக்க விட்டதுதான் தி.மு.க. அரசின் சாதனை

கடலூர், ஜூலை.13- மக்களை கடனில் தத்தளிக்க விட்டதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை தொடங்கினார் அண்ணா தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, 5-வது நாளான நேற்று, கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். கடலூரில் உழவர் சந்தை […]

Loading