செய்திகள்

டெல்லியில் மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி, ஜன. 11: மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.18,500 கோடியை உடனே ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த நிதி மந்திரிகள் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்க இருக்கிறது. பா.ஜனதா அரசு கடந்த 2017-ம் ஆண்டு பட்ஜெட் தேதியை மாற்றி அமைத்ததன்படி அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் […]

Loading

செய்திகள்

போரூர் – வடபழனி இடையே இன்று மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை, ஜன. 11: போரூர்- – வடபழனி இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. 2ஆம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் […]

Loading

செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் நாளை விண்ணில் சீறிப்பாய்கிறது

சென்னை, ஜன. 11: பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய […]

Loading

செய்திகள்

ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம்: 116 பேர் பலி

வாஷிங்டன், ஜன. 11: ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 116 பேர் பலியாகி இருக்க கூடும் என மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. கமேனியிடம் இருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க உதவ அமெரிக்கா தயாராக உள்ளது” என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் மக்களிடையே […]

Loading

செய்திகள்

கரூர் சம்பவம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராகிறார் விஜய்

சென்னை, ஜன. 11: கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவகத்தில் தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளது. இதைத் தொடரந்து டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் […]

Loading

செய்திகள்

கடலூரில் புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம்: கலெக்டர் சிபி ஆதித்யா திறந்து வைத்தார்

கடலூர், ஜன. 11– கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில், “அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சிக்கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் […]

Loading

செய்திகள்

நெமிலி ஊராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் சந்திரகலா ஆய்வு

ராணிப்பேட்டை, ஜன. 11: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தார். இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் நெடும்புலி ஊராட்சியில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்த கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் 6 வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு […]

Loading

செய்திகள்

கார் ஓட்டினார் ஸ்டாலின்

சென்னை, ஜன. 10: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வழக்கமான காலை நடைபயிற்சிக்கு பிறகு விண்டேஜ் காரை ஓட்டி மகிழ்ந்துள்ளார். இதனை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் டி.ஆர்.பி.ராஜா கூறியிருப்பதாவது; ”நமது அன்புக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் எளிமையான, பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற ஒரு மனிதர். குளிர்காலத்தின் இதமான காலைப் பொழுதில் நிதானமாக நடைப்பயிற்சி செய்வது, ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டுவது, அவ்வப்போது சாதாரணமாக காரில் பயணம் செய்வது போன்ற வாழ்க்கையின் […]

Loading

செய்திகள்

20-ந்தேதி முதல் தொடர் போராட்டம்: அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை, ஜன. 10: எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்றால் 20–ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 354 அரசாணையை மறுவரையறை செய்ய வேண்டும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து […]

Loading

செய்திகள்

ஏரியில் மூழ்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜன. 10– ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கிழக்கு மருதூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி என்பவரின் மகன் சுரேஷ் (வயது 43) என்பவர் நேற்று முன்தினம் (8–ந் தேதி) மாலை 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக மேற்படி கிராம ஏரியில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த […]

Loading