செய்திகள்

எனது தலையீட்டால் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது: அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

வாஷிங்டன், ஜூலை 19– இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தனது தலையீட்டால் போர்நிறுத்தப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களில் ஈடுபட்டன. பின்னர், இருநாட்டு தலைவர்களின் ஒப்புதலின்படி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்றுமுதல், தனது தலையீட்டால் […]

Loading

செய்திகள்

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

சென்னை, ஜூலை 19– முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்தவர் மு.க.முத்து. பத்மாவதி, பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி. மு.க.முத்து 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’ ‘பூக்காரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடித்த படங்களில் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். திமுக மேடைகளிலும் கட்சியின் […]

Loading

செய்திகள்

ஆன்லைன் பந்தய செயலி வழக்கு: ஜூலை 21ல் ஆஜராக கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி, ஜூலை 19– பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ‘ஜங்லீ ரம்மி, ஜீட்வின், லோட்டஸ் 365’ உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ சூதாட்ட செயலிகள் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட சூதாட்ட […]

Loading

செய்திகள்

ரூ.1 கோடி ‘டிஜிட்டல்’ கைது மோசடி: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

புதுடெல்லி, ஜூலை 19– இந்தியாவில் முதல்முறையாக, 108 பேருரிடம் ரூ.1 கோடி டிஜிட்டல் மோசடி செய்து கைது செய்யப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேற்குவங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ‘ஆன்லைன்’ மூலமாக சைபர் குற்றவாளிகள் பண மோசடி செய்வதை தடுக்க, சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டிஜிட்டல் முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் […]

Loading

செய்திகள்

பெரம்பூர்–அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய ரெயில் பாதை: ரெயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை, ஜூலை.19- பெரம்பூர்-–அம்பத்தூர் இடையே ரூ.182 கோடியில் 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 மற்றும் 6-வது புதிய ரெயில் பாதைகள் அமைக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடமாவட்டங்களுக்கு சென்டிரலில் இருந்து தான் பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படுகிறது. எனவே, பெரம்பூர் வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. இதற்காக, பெரம்பூர் ரெயில் […]

Loading

செய்திகள்

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை சிறை

4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பு கோவை, ஜூலை.19- பிளஸ்-–1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை முதன்மை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார். அவர்களில் 3 பேர் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பிளஸ்-–1 படித்து வந்த 16 வயது மாணவிக்கு, ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் காதலித்து வந்தனர். […]

Loading

செய்திகள்

டெல்லி, பெங்களூருவில் 85 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, ஜூலை 18– பெங்களூருவில் 40 பள்ளிகளுக்கும், புதுடெல்லியில் 45 பள்ளிகளுக்கும் (மொத்தம் 85 பள்ளிகள்) மர்ம நபர்கள் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களாக புதுடெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இன்று 45 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “வணக்கம். பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்கள் வைத்துள்ளேன் என்பதை […]

Loading

செய்திகள்

ரூ.1.5 லட்சம் லஞ்சம்: அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது

கோவை, ஜூலை 18– கோவையில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இநந்து சமய அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வருபவர் இந்திரா (54). சூலூர் பாப்பம்ப்ட்டி பகுதியில் உள்ள தனியார் கோவிலில் அதிக வருவாய் வருகிறது. ஆனால் அந்த கோவிலில் முறையான நிர்வாகம் இல்லை. அக்கோவிலை இந்து சமய அறநிலைய துறை எடுத்துக்கொள்ள வேண்டும் என சுரேஷ்குமார், இந்திராவிடம் மனு அளித்தார். அக்கோவிலை இந்து சமய […]

Loading

செய்திகள்

10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுகிறார்: ராகுல் காந்தி

புதுடெல்லி, ஜூலை 18– கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார். குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ. 37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, அவருக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் […]

Loading

செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி பணம், நகை திருட்டு

சென்னை, ஜூலை 18– சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடாசலம். ஓய்வு பெற்ற ரெயில்வே தலைமை பொறியாளரான இவரது வீட்டில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் மற்றும் தங்க வளையல்கள் திருட்டு போயுள்ளது. பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக வெங்கடாசலம் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெங்கடாசலத்தின் வீட்டில் கொள்ளைபோனதற்கான எந்த அடையாளங்களும் இல்லை.வீட்டில் இருந்தவர்களே நகை-பணத்தை […]

Loading