செய்திகள் நாடும் நடப்பும்

துணை ஜனாதிபதி போட்டியில் நட்டா, ஹரிவன்ஷ்

தலையங்கம் இந்திய அரசியலில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, மாண்புமிகு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், தனது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்கர், தனது ஐந்து ஆண்டு பதவிக் காலம் (2022 ஆகஸ்ட் முதல் 2027 வரை) நிறைவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்ததன் மூலம், வி.வி.கிரி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் போன்ற ஒரு சில துணை […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று பிரிட்டன் செல்கிறார்

முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு டெல்லி, ஜூலை 23– பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிரிட்டன் செல்லும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் இங்கிலாந்துக்கு (ஜூலை 23 முதல் 24 வரை) அதிகாரப்பூர்வ பயணமாக செல்கிறார். இந்தப் பயணத்தில், அவர் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இருதரப்பு உறவுகளை […]

Loading

செய்திகள்

சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்:” நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு

சென்னை, ஜூலை 23– தனது சொந்த வீட்டிலேயே தனக்குத் துன்புறுத்தல் நடப்பதாக நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகி இருந்து வரும் தனுஸ்ரீ தத்தா தற்போது பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது சொந்த வீட்டிலேயே தனக்குத் […]

Loading

செய்திகள்

பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையான அதி நவீன ‘மெட்ரோ’ சுரங்க ரெயில் பணி நிறைவு

சென்னை, ஜூலை 23– சென்னை தி.நகர் பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையான அதிநவீன ‘மெட்ரோ’ சுரங்க ரெயில் பணியின் ஒரு வழி சாலை பணி இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையிலான சுமார் 2.1 கி.மீ. தூரத்திற்கான சுரங்கப்பாதை பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது வழித்தடம் 4 களங்கரைவிளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை (Lighthouse – Poonamallee […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றத்தில் 3-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 23– எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக இன்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை, கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன. எனினும், […]

Loading

செய்திகள்

ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் 2ம் இடத்தில் தமிழ்நாடு

‘தேசிய சராசரியை விஞ்சினோம்’ : தங்கம் தென்னரசுவின் பதிவை மேற்கோள்காட்டி ஸ்டாலின் பெருமிதம் சென்னை, ஜூலை 23– ‘‘தேசிய சராசரியை விஞ்சினோம். கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம். அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-–ல் முதல் மாநிலமாக உயருவோம்’’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசுவின் பதிவைமேற்கோள்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சமூகவலைதளப்பதிவு வருமாறு:– […]

Loading

செய்திகள்

நானே போரை நிறுத்தினேன்:25வது முறையாக டிரம்ப் பேச்சு

மோடி மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி வாஷிங்டன், ஜூலை 23– அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாகவும், இதனால் மிகப்பெரிய அணு ஆயுதப் போர் உருவாவது தவிர்க்கப்பட்டதாகவும் கூறினார். இவ்வாறு அவர் கூறுவது 25வது முறையாகும் என்பதால் இது வெள்ளி விழா என்று காங்கிரஸ் கட்சி விமர்ச்சித்துள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இந்தியா – பாகிஸ்தான், காங்கோ – ருவாண்டா […]

Loading

செய்திகள்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்:சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஜூலை 23– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதனடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் சவரன் 73,440 ரூபாய்க்கும் […]

Loading

செய்திகள்

“தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சி, சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது”

தமிழக அரசு பெருமிதம் சென்னை, ஜூலை.23- தனிநபர் வருமானத்தில் 2வது இடம் பெற்ற தகவல் வெளியன நிலையில், தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சி, சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2024–2025ம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. […]

Loading

செய்திகள்

‘பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பேன்’: ஐகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

சென்னை, ஜூலை.23- சென்னை ஐகோர்ட்டின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவத்சவா உறுதி அளித்து பேசினார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவத்சவா நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட் சார்பில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஐகோர்ட் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. அப்போது தலைமை நீதிபதியை வரவேற்று அட்வகேட் ஜெனரல் […]

Loading