செய்திகள்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி

பிரதமர் மோடி பேச்சு தூத்துக்குடி, ஜூலை.27- ”மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 3 லட்சம் கோடி ரூபாயை நிதியை வழங்கியுள்ளது. இது, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கிய தொகையுடன் ஒப்பிடும் போது, 3 மடங்கு அதிகம். நீலப்புரட்சி வாயிலாக, மீனவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளில் கடந்த […]

Loading

செய்திகள்

தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் 521 பெண்களுக்கு திருமண நிதியுதவி: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

சென்னை, ஜூலை 27–- சென்னை மாவட்டத்தில் 521 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.2.22 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை, ஜார்ஜ் டவுன், ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற அரசு விழாவில் சென்னை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் 521 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூபாய் 2 கோடியே […]

Loading

செய்திகள்

விழித்திரை மாற்று அறுவை சிகிச்சைக்கு புதிய தொழில்நுட்பம்: டாக்டர் அமர் அகர்வாலின் கண்டுபிடிப்பு

சென்னை, ஜூலை 26– டாக்டர் அகர்வால்ஸ்கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவரும், உலக அளவில் புகழ்பெற்ற கண் மருத்துவருமான பேராசிரியர் அமர் அகர்வால், ‘‘பின் ஹோல் புப்பிலோபிளாஸ்டி’’ (பிபிபி) என்ற புதிய அறுவை சிகிச்சை முறையை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளார். கண் கருவிழிப் படல மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக அமைந்திருக்கும் இச்சிகிச்சை முறை எளிதான ஒன்றாகும். உலகளாவிய அளவில் கருவிழி தானம் அளிப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இன்றும் லட்சக்கணக்கானோர் பார்வை பெறும் வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். இச்சூழலில் […]

Loading

செய்திகள்

சிறுகதை ….. கற்றார் – பெற்றார் : விழா..! விழா 24 …….. ராஜா செல்லமுத்து

” நடக்கப் போற திருவிழாவுக்கு நீங்க அவசியம் வந்திரணும். சரியா? ” என்று அப்துல் காதரிடம் பத்திரிகையைக் கொடுத்தார், சொக்கலிங்கம். ” நீங்க சொல்லி வராம இருப்பேனா, என்ன? திருவிழாவில முதல் ஆளா நான் வந்து நிப்பேன்” என்றார், அப்துல் காதர். ” சரி… இன்னும் நிறையப் பேருக்குப் பத்திரிகை குடுக்கணும். அப்ப நான் வரட்டுமா?” என்று சொல்லிய, சொக்கலிங்கம் அப்துல்காதர் வீட்டை விட்டுக் கிளம்பினார். ” அவசியம் எங்க திருவிழாவில நீங்க பங்கெடுத்துக்கிரணும்” என்று தன் […]

Loading

செய்திகள்

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று சேவை செய்ய வேண்டும்

சென்னை, ஜூலை 26– நீதிமன்ற அவமதி வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி் சேவை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நூதன தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை ஐகோர்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குமார் ஜெயந்த், பிரபாகர், ராஜாராமன், குமாரவேல் பாண்டியன் மற்றும் பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக சின்னதம்பி, எம்.கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி பட்டு தேவானந்த் […]

Loading

செய்திகள்

6வது நாளாக சிகிச்சை: இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே ஸ்டாலின் அரசுப் பணி

சென்னை, ஜூலை 26– சென்னை அப்போலோ மருத்துவமனையில் 6வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணியை செய்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முதலமைச்சர் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் […]

Loading

செய்திகள்

திருச்சியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி

சென்னை, ஜூலை 26– திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 10.45-க்கு சந்தித்து பேசுகிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இன்றிரவு 7.50க்கு தூத்துக்குடி வருகிறார். பின்னர் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார்.இந்த விழா முடிந்த பிறகு, விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு இன்று […]

Loading

செய்திகள்

தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ.73,280க்கு விற்பனை

சென்னை, ஜூலை 26– சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து, கடந்த 23ம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.75 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு […]

Loading

செய்திகள்

சென்னை புழல் பகுதியில் 2 வயது ஆண் குழந்தை விற்க முயற்சி:

சென்னை, ஜூலை 26– 2 வயது ஆண் குழந்தையை விற்க முயன்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை, புழல் பகுதியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் இ சேவை மையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் புழல், கதிர்வேடு பகுதியைச்சேர்ந்த தீபா என்பவர் அறிமுகமாகியுள்ளார். தீபாவிடம், அவரது தோழியான வித்யா (எ) வித்யாராணி என்பவர் குழந்தைகள் தன்னிடம் இருப்பதாகவும், குழந்தையை பணம் கொடுத்து வாங்க யாராவது இருந்தால் அவர்களிடம் […]

Loading

செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: 2 நாட்களாய் போலீசுக்கு ‘டிமிக்கி’ கெொடுத்து வந்து மேற்கு வங்காளத்து இளைஞன் கைது

கும்மிடிப்பூண்டி, ஜூலை 26– கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 நாட்களாய் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த மேற்கு வங்காள இளைஞன், சூளூர்ப்பேட்டை ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டான். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக […]

Loading