செய்திகள்

12–ம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நடப்பு கல்வியாண்டிலேயே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேரலாம்

சென்னை, ஜூலை 29– 12–ம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டே (2025-–26) இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:–- ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக்கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் […]

Loading

செய்திகள்

சப்–இன்ஸ்பெக்டரை தாக்க அரிவாளுடன் பாய்ந்த 17 வயது சிறுவன் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

திருநெல்வேலி, ஜூலை 29– நெல்லை பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறி 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எஸ்.ஐ., இருதரப்பினர் மோதலை தடுக்க முயற்சித்தார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் எஸ்.ஐ., முருகன் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவரது வீட்டில் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலில் பலியானவர்களின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்

புதுடெல்லி, ஜூலை 29– ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் கடந்த மே மாதம் 7–ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் இணைந்து நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள […]

Loading

செய்திகள்

22 நர்சுகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூலை.29- சிறப்பாக பணியாற்றிய 22 நர்சுகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று, தமிழ்நாடு நர்சிங் மற்றும் மகப்பேறு கவுன்சிலின் நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது. இதில், சிறப்பாக பணியாற்றிய 22 நர்சுகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். மேலும், தமிழ்நாடு நர்சிங் மற்றும் மகப்பேறு கவுன்சிலின் நூற்றாண்டு தொடக்க விழா இலச்சினை (லோகோ) மற்றும் காலண்டர் தொகுப்பை வெளியிட்டார். […]

Loading

செய்திகள்

திருநெல்வேலியில் 400 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி, ஜூலை 29– திருநெல்வேலியில் 400 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசனார்குளம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அம்பலம், மேற்கு தெருவை சேர்ந்த ஜோசப் (வயது 21) என்பவரை போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர் மனித உடலுக்கும், உயிருக்கும் கேடு […]

Loading

செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் கைது

ராமேஸ்வரம், ஜூலை 29– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்கரையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மட்டுமின்றி மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த […]

Loading

செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆடிப்பூர விழா : சுயம்பு அம்மனுக்கு 3 லட்சம் பக்தர்கள் பால் அபிஷேகம்

மேல்மருவத்தூர், ஜூலை 29– மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 54 ஆம் ஆண்டு ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று விடியற்காலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க குரு பீடத்தில் உள்ள பங்காரு சித்தர் திருவுருவச் சிலைக்கும், கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும் அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. மேலும் குரு பீடத்தில் உள்ள ஆன்மிககுரு பங்காரு சித்தர் பாதுகைகளுக்கு பாத பூஜை நடைபெற்றது. […]

Loading

செய்திகள்

புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000: ரங்கசாமி அறிவிப்பு

நாட்டில் முதல் முறையாக 800 சதுர அடியில் இலவச மனைப்பட்டா வழங்கினார் புதுவை, ஜூலை 28– நாட்டில் முதல் முறையாக புதுச்சேரியில் 800 சதுர அடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டாவை முதலமைச்சர் என்.ரங்கசாமி இன்று வழங்கினார். அப்போது மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மகளிர் […]

Loading

செய்திகள்

காப்புரிமை விவகாரம்; இளையராஜா மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

புதுடெல்லி, ஜூலை 28– காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. தங்களுக்கு உரிமை வழங்கப்பட்ட 228 ஆல்பம் பாடல்களை 3ம் நபர்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியிருப்பதாக கூறி, சோனி நிறுவனம், இளையராஜா நிறுவனத்தின் மீது மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இளையராஜாவின் நிறுவனம் அவ்வாறு செய்யாமல் இருக்கும் வகையில் தடை விதிக்கவும், இடைக்கால நிவாரணம் கோரியும் சோனி நிறுவனம் […]

Loading

செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் விவாதத்திற்கு முன்பே எதிர்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 28– ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று மக்களவையில் விவாதம் நடைபெற இருந்த நிலையில், அதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இருஅவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் […]

Loading