செய்திகள்

மாலேகான் குண்டுவெடிப்பு: பா.ஜ.க. முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேர் விடுதலை

மும்பை, ஜூலை 31– மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேரையும் என்ஐஏ கோர்ட் விடுதலை செய்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29–ந்தேதி மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் எம்.பி. […]

Loading

செய்திகள்

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு அப்போலோவின் புதிய செயல்திட்டம்

‘எண்ட்–-ஓ செக்’ என்னும் பெயரில் அறிமுகம் சென்னை: ஜுலை 31– பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தின் மீது அர்ப்பணிப்புடன் செயல்படும் அப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் எண்ட்–-ஓ செக் (End -O Check) என்ற ஒரு செயல்திட்டத்தை தொடங்கியிருக்கிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான விரிவான செயல்திட்டம் இது. கருப்பையக வரிச்சவ்வு மற்றும் சினைப்பை ஆகியவற்றில் வரக்கூடிய மிகப்பொதுவான பெண் பிறப்புறுப்பு சார்ந்த இரு புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்: இந்து முன்னணி தலைவர் அறிவிப்பு

திண்டுக்கல், ஜூலை 31– தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கூறினார். இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு குறித்து, “மாற்றம் தந்த முருக பக்தர்கள் மாநாடு – இந்த எழுச்சி திக்கெட்டும் பரவட்டும்” என்ற தலைப்பில் திண்டுக்கல்லில் இந்து முன்னணி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெற்ற […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம், ஜூலை 31– நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டு படகில் மீன்பிடிக்க சென்ற 9 பேரை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது […]

Loading

செய்திகள்

தேனி விவசாயி வங்கி கணக்கில் ரூ.1.05 கோடி டெபாசிட்: வருமான வரித்துறை விசாரணை

உத்தமபாளையம், ஜூலை 31– தேனி அருகே விவசாய கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமையகவுண்டன்பட்டி கருப்பணன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் ஏலத் தோட்டம் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் உள்ளது. இந்நிலையில் தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து இவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. […]

Loading

செய்திகள்

தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது

அறிவுசார் சொத்துரிமை மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சென்னை, ஜூலை.31- ‘தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது’ என அறிவுசார் சொத்துரிமை மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கினார். முதன்மை […]

Loading

செய்திகள்

12 கிலே கஞ்சா பறிமுதல்: வடமாநில ஆசாமி கைது

ஆவடி, ஜூலை 31– தமிழ்நாடு அரசின் “போதையில்லா தமிழ்நாடு” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அண்ணனூர் ரெயில் நிலையம் அருகிலுள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சந்தேக நபரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்த போது அவரிடம் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து […]

Loading

செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் மீன்குஞ்சு இருப்பு திட்டம்: கலெக்டர் சிபி ஆதித்யா துவக்கி வைத்தார்

கடலூர், ஜூலை 31– மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை புவனகிரி வட்டத்திற்குட்பட்ட வத்தராயன்தெத்து கிராமத்தில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் துவக்கி வைத்து, மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு மீன் விரலிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: 2025-2026ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அறிவிப்பின்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை […]

Loading

செய்திகள்

1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தலும் அமையும்: தவெக தலைவர் விஜய் பேச்சு

சென்னை, ஜூலை 30– தமிழக அரசியலில் 1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தலும் அமையும் என்று நடிகர் விஜய் தெரிவித்தார். 2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மதுரை மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்காக MY TVK (மை டிவிகே) என்னும் […]

Loading

செய்திகள்

காதல் விவகாரம்: சென்னையில் கார் ஏற்றி மாணவர் கொலை: தி.மு.க. பிரமுகர் பேரன் கைது

சென்னை, ஜூலை 30– சென்னையில் கார் ஏற்றி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. பிரமுகரின் பேரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய் (வயது 21). சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் தனது கல்லூரி நண்பர் அபிஷேக் என்பவருடன் […]

Loading