லக்னோ, ஆக. 3- உத்தரப்பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்த 11 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ 11 பேர் இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேருடன் சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: […]
![]()











