செய்திகள்

பட்டாசு தொழிலுக்குத் தேவையான உதவிகள் செய்வோம்: எடப்பாடி உறுதி

சிவகாசி, ஆக.9- சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், அச்சக அதிபர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று கலந்துரையாடினார். ஆலைக்கு சென்று பட்டாசு உற்பத்தியையும் பார்வையிட்டார். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று காலையில் சிவகாசியில் உள்ள ஒரு மண்டபத்தில், அச்சக உரிமையாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலண்டர் தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினருடன் எடப்பாடி கலந்துரையாடலில் ஈடுபட்டார். […]

Loading

செய்திகள்

பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த ரெயிலை அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி

ராமேஸ்வரம், ஆக. 9– பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த ரெயிலின் அபாய சங்கிலியை பயணி ஒருவர் இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நில பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன்- –மண்டபம் இடையே நடுக்கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் புதிய ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய ரெயில் பாலத்தில் தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் […]

Loading

செய்திகள்

100 பெண்கள், திருநங்கைகளுக்கு மானியத்துடன் ஆட்டோ

சென்னை, ஆக.9- 100 பெண்கள், திருநங்கைகளுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள 100 பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் புதிய ஆட்டோ வழங்கும் விழா தொழிலாளர் நலன் மற்றும திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. […]

Loading

செய்திகள்

‘கம்பன் கலைக்களஞ்சியம்’ பொன் விழா சிறப்பு மலர்: ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, ஆக.9- ‘கம்பன் கலைக்களஞ்சியம்’ என்ற பொன்விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் அவர், `கம்பன் கலைக்களஞ்சியம்’ என்ற பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பெற்றுக்கொண்டார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருதை […]

Loading

செய்திகள்

அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் மேலும் ரூ.25 லட்சம் நிவாரண நிதி

சிவகங்கை, ஆக.9- ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் மேலும் ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திர காளியம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். சம்பவத்தன்று கோவிலுக்கு வந்த மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரில் அஜித்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் […]

Loading

செய்திகள்

‘நடப்புக் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து’: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் என தகவல் சென்னை, ஆக. 8– மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாநில கல்விக்கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

Loading

செய்திகள்

பிரேசில் அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி, ஆக. 8- பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி நேற்று மேலும் இந்தியப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளன.இதனை தொடர்ந்து இந்த வரிவிதிப்பிற்குபதிலளித்த இந்திய […]

Loading

செய்திகள்

கர்நாடகாவில் சாலையில் சிதறிக் கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள்: தலையை தேடும் போலீசார்

துமகூரு, ஆக. 8– கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் சாலையில் பெண்ணின் உடல் பாகங்கள் சிதறிக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் தலையை தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா கோலால் அருகே சிம்புகனஹள்ளி முத்தையாலம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று காலை ஒரு கருப்பு நிற பாலிதீன் பை கேட்பாரற்று கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அந்த […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி, ஆக.8-– எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட அமளியால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 21ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து […]

Loading

செய்திகள்

வயிற்றெரிச்சலில் பேசி வரும் எடப்பாடி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

சென்னை, ஆக, 8- அண்மையில் வெளியான ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்து எடப்பாடி வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார் என்று டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார். எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் அண்மையில் வெளியான மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை சுட்டிகாட்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு தமிழ் நாடு அரசு தான் என பெருமிதம் […]

Loading