செய்திகள்

அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமான

வாஷிங்டன், ஆக. 12– அமெரிக்காவின் மொண்டானாவில் தரையிறங்கிய சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறிய ரக விமானத்தில் பயணித்த விமானி உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. வாஷிங்டனின் புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், மொண்டானாவின் காலிஸ்பெல் சிட்டி விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணிக்கு தரையிறங்கியுள்ளது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் […]

Loading

செய்திகள்

மினிமம் பேலன்ஸ் தீர்மானிப்பது வங்கிகள் தான்; நாங்கள் கட்டுப்படுத்தவில்லை: ரிசர்வ் வங்கி

புதுடெல்லி, ஆக. 12– மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள். நாங்கள் கட்டுப்படுத்தவில்லை” என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெளிவுப்படுத்தி உள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டத்தில் நிருபர்களிடம் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது:– சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) நிர்ணயிக்க வங்கிகளுக்கு சுதந்திரம் உள்ளது. மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள். நாங்கள் கட்டுப்படுத்தவில்லை. அது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை வரம்பிற்குள் வராது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயிக்க விரும்பும் தொகையை […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி, ஆக. 12– நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இதற்கு முந்தைய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மராட்டிய மாநில தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக அதாவது வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகார் கூறினார்.இதனை ‘வாக்குத்திருட்டு’ என ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். இந்த […]

Loading

செய்திகள்

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்: நடிகர் விஜய் அழைப்பு

சென்னை, ஆக. 12– வைகை மண்ணில் நடக்கும் மாநாடு வாகை சூடும் வரலாறு என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார். மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு, 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி […]

Loading

செய்திகள்

சீனாவுக்கு சலுகை: வரிவிதிப்பு மேலும் 90 நாட்கள் நிறுத்திவைப்பு

வாஷிங்டன், ஆக. 12– சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டிரம்ப், கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வதாக கூறி 50 சதவீதம் வரை வரி உயர்த்துவதாக அறிவித்தார். சீனாவுக்கு 30 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் […]

Loading

செய்திகள்

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கடும் பாதிப்பு

வாஷிங்டன், ஆக. 12– இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கடும் பாதிப்படைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி, ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கிய தன் விளைவாக இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த வரி விதிப்பினால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, காலணி உள்ளிட்ட பொருள்களுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படக் […]

Loading

செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில்

திருச்சி, ஆக.12– சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மற்றும் இருப்புப் பாதை காவல்நிலையப் போலீஸாா் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப்படை, ரயில்வே காவல்துறை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினா் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை […]

Loading

செய்திகள்

மதுரை ஹோலிபேமிலி பள்ளியில் மாநகர போக்குவரத்து காவல் சார்பாக மாணவர்களுக்கு

மதுரை, ஆக.12– தமிழகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹோலிபேமிலி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளை பற்றிய விழிப்புணர்வினை திலகர்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி வழங்கினார். இதில் […]

Loading

செய்திகள்

70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள்

சென்னை, ஆக 12– 70 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பயனடையும் ‘‘தாயுமானவர் திட்டம்” தொடங்கி வைக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்தியாவுக்கே முன்மாதிரியான முயற்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு கூறியுள்ளார். இது குறித்து, அவர் சமூகவலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள காணொலிப்பதிவில் கூறியிருப்பதாவது:– வணக்கம்! திராவிட மாடல் […]

Loading

செய்திகள்

2 புதிய வழித்தடங்களில் மெட்ரே ரெயில் சேவை

சென்னை, ஆக. 12– சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனமானது கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலான வழித்தட நீட்டிப்பு மற்றும் தாம்பரம், கிண்டி, வேளச்சேரி வழித்தட நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரை நீடிக்கும் வகையிலான 4வது வழித்தடம் நீட்டிப்பு செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி மெரீனா கடற்கரை […]

Loading