செய்திகள்

50 சேவைகளுக்காக ‘மெட்டா’ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

மின்சாரம் – குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம்* மாநகராட்சி வரிகளை கட்டலாம்; மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம்: பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்து சென்னை, ஆக 15– தமிழ்நாடு அரசு, வாட்ஸ்அப் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகளை அறிமுகப்படுத்த மெட்டாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. முதல் கட்டத்தில் பயன்பாட்டு கட்டண செலுத்துதல் உட்பட 50 குடிமக்கள் சேவைகள் வழங்கப்படும்.மக்கள், புகார்கள் அளிப்பது, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவது, மாநகராட்சி வரிகளை கட்டுவது, மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது […]

Loading

செய்திகள்

சென்னை விமானத்தில் பெண் தொழில் அதிபரிடம் ரகளை செய்த 3 வாலிபர்கள்

சென்னை, ஆக. 14– கோவையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் தொழில் அதிபரிடம் வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபர்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு கோவையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 140 பயணிகளுடன் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் பயணித்து கொண்டிருந்த 35 வயது பெண் தொழில் அதிபர் ஒருவரது இருக்கைக்கு, பின் வரிசையில் அமர்ந்திருந்த 3 வாலிபர்கள் கூச்சல் போட்டு, சத்தமாக பேசிக்கொண்டு, சக பயணிகளுக்கு […]

Loading

செய்திகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு 6 புதிய திட்டங்கள் அறிவிப்பு

சென்னை, ஆக. 14– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். முன்னதாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்துக்கு அண்ணாதி.மு.க., மார்க்சிஸ்ட், தே.மு.தி.க., த.வெ.க. […]

Loading

செய்திகள்

முதல்வரின் பெயருக்கு தடை கோரி வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை, ஆக. 14– உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்த பொது நல மனுவை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரி, அதிமுக வழக்கறிஞர் இனியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். சென்னை ஐகோர்ட்டில், அதிமுக வழக்குரைஞர் இனியன், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் […]

Loading

செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? விஜய் கண்டனம்

சென்னை, ஆக. 14– தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த தி.மு.க. அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள […]

Loading

செய்திகள்

2ம் கட்டமாக 17 தொகுதிகளை வெளியிட்டார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சென்னை, ஆக. 14– ‘அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள்’ – தமிழ்மொழி பெயர்ப்பு இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும் முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கர் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவ சமுதாயம் உருவாக்க பாடுபட்டவர். நம்மை முன்னேறவிடாது இறுகப் பிடித்து இன்னல்கள் பல விளைவிக்கும் சாதி எனும் கோட்பாட்டை நீக்கிட வேண்டும் என்று சமத்துவ முரசு கொட்டியவர். சாதி, சமயங்கள், […]

Loading

செய்திகள்

கார், ஜீப், வேன்கள் ரூ.3 ஆயிரத்தில் 200 முறை சுங்கச்சாவடியை கடக்கும் ஓராண்டுக்கான ‘பாஸ்’: நாளை அறிமுகம்

சென்னை, ஆக.14- தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ‘பாஸ்டேக்’ முறை நடைமுறையில் உள்ளது. இதற்கிடையே ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் சலுகையில் பாஸ் வழங்கும் முறையை மத்திய அரசு அறிவித்தது. இந்த ஓராண்டு பாஸ் சுதந்திர தினமான நாளை முதல் அமலுக்கு வருகிறது. […]

Loading

சினிமா செய்திகள்

ரஜினி கூலி படம் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

சென்னை, ஆக. 14– ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

உறுப்புகள் தானம் நாட்டின் கட்டாயம்!

ஆர். முத்துக்குமார் உலக உறுப்புத் தான தினத்தையொட்டி, ஆகஸ்ட் 13 , அப்பல்லோ மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, இந்தியாவில் உறுப்பு தானத்தின் குறைவான நிலையை சுட்டிக்காட்டி மக்களிடம் வலுவான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மருத்துவத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இருந்தாலும், தகுந்த தான உறுப்பு கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் பல உயிர்கள் பலியாகி கொண்டு இருப்பது தவிர்க்கக்கூடிய பேரிழப்பாகும் என பதிவிட்டுள்ளார். 2013-ல் 4,990 உறுப்பு […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 46.5 லட்சம் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை, ஆக.14– தமிழ்நாடு வரலாற்றில் என்றும் இல்லாத சாதனையாக இந்த ஆண்டு 46.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 2025–-26ம் ஆண்டு நெல் கொள்முதல் பருவத்தில் 1.9.2025 முதல் நெல்கொள்முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக நெல் விவசாயிகள் […]

Loading