செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் துணை நிற்போம் என சீனா அறிவிப்பு

பெய்ஜிங், ஆக. 22– அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ பெய்ஹோங் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷ்யா – உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனினும் இந்தியா பின்வாங்காது […]

Loading

செய்திகள்

டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை: பிடித்த இடத்திலேயே விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் பதில் அளிக்க உத்தரவு புதுடெல்லி, ஆக. 22– தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், பிடித்த நாய்களை மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். புதுடெல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் ‘ரேபிஸ்’ என்ற நோய் பரவி வருவதாக பத்திரிகைகளில் […]

Loading

செய்திகள்

ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல் உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான்: விஜய்க்கு எடப்பாடி பதிலடி

உத்தரமேரூர். ஆக. 22– ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல், உழைக்காமல் பலன் பெற நினைப்பதே ஊழல் தான் என்று விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அண்ணாதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்துவிட்டு, மறைந்த முதல்வர் அண்ணாவின் இல்லத்துக்குச் சென்றார். அங்கு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு […]

Loading

செய்திகள்

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த பெண் கைது

சென்னை, ஆக. 21– மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாக பணம் ரூ.31.88 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய பெண் குற்றவாளி கைது செய்யப்பட்டார். கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த ரோஸ்மேரி (45) கடந்த 2022-ம் ஆண்டு அவரது மகளுக்கு எம்.பி.பி.எஸ் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தபோது, தெரிந்த நபர்கள் மூலம் அறிமுகமான அந்தோணிதாஸ் மற்றும் மாதவன் என்பவரின் மனைவி ரம்யா (37) ஆகியோர் மருத்துவக் கல்லூரி மற்றும் […]

Loading

செய்திகள்

தாக்குதல் எதிரொலி டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி, ஆக. 21– டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நேற்று காலை முதலமைச்சர் ரேகா குப்தாவின் வீட்டில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டமான ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதல்வர் ரேகா குப்தாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாகத் தாக்கினார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடி: வலுப்பெறும் இந்திய – ரஷ்ய வர்த்தகம்!

ஆர். முத்துக்குமார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 50% கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா தனது வர்த்தகக் கொள்கைகளை பன்முகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா களம் இறங்கி விட்டது. மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா வர்த்தகக் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்ய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் […]

Loading

செய்திகள்

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு : ஸ்டாலின்

சென்னை, ஆக. 22– இன்று சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என்று சென்னை போற்றும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:– எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த […]

Loading

செய்திகள்

விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இந்தியாதான் அழகு: சுபான்ஷு சுக்லா பேட்டி

புதுடெல்லி, ஆக.22- விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியாதான் உலகிலே யே அழகாக தெரிகிறது என சுபான்ஷு சுக்லா கூறினார். ‘ஆக்சியம்-–4’ பயணம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, கடந்த 17-ந்தேதி டெல்லி வந்தார். 18-ந்தேதி பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு, சொந்த ஊரான லக்னோ சென்ற அவர், டெல்லியில் நடைபெறும் விண்வெளி தொடர்பான மாநாட்டில் பங்கேற்க நேற்று மீண்டும் டெல்லி வந்தார். டெல்லியில் இஸ்ரோ தலைவர் நாராயணன், மத்திய அறிவியல் […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன

புதுடெல்லி, ஆக.22- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்றும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. இதனால் மக்களவையை நண்பகல் 12 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சியினரை சபாநாயகர் கடுமையாக சாடினார். அவர் கூறும்போது, ‘நடப்பு தொடரில் 120 மணி நேர விவாதத்துக்கு அலுவல் ஆய்வுக்கமிட்டி ஒப்புதல் அளித்திருந்தது. […]

Loading

செய்திகள்

அரசின் மறுவாழ்வுத் திட்ட நடவடிக்கைகள்: முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை தமிழர்கள் நன்றி

சென்னை, ஆக.22-– தமிழகத்தில் சில மாவட்டங்களில் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பலர் வசித்து வருகின்றனர். அந்த தமிழர்களுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு அளித்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துகுடி, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, திருவள்ளூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் நேற்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக நிதி உதவி, குடியுரிமை முயற்சிகள், […]

Loading