செய்திகள்

‘‘சுதர்சன் ரெட்டி – நக்சல் ஆதரவாளர்’’: அமித்ஷா பேச்சுக்கு முன்னாள் நீதிபதிகள் குழு கடும் கண்டனம்

புதுடெல்லி, ஆக. 25– இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டியை ‘‘நக்சல் ஆதரவாளர்’’ என உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டதற்கு 18 பேர் கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என உள்துறை அமைச்சர் அமித்ஷா […]

Loading

செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 3-ந்தேதி தமிழகம் வருகை

திருச்சி, ஆக. 25– ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 3–ந்தேதி தமிழகம் வருகிறார். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு […]

Loading

செய்திகள்

உடல்நலக்குறைவு காரணமாகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா: அமித்ஷா விளக்கம்

புதுடெல்லி, ஆக. 25– ”உடல்நலக் குறைவு காரணங்களுக்காகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். உடல் நலனை முன்னிட்டு மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்து ஜனாதிபதி திரவுபதிக்கு அதுபற்றி ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். இதேபோன்று […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் திருப்பூர் குமரன், ஈ.வெ.கி.சம்பத் சிலை : ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஆக 25– விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி, அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது– ‘‘தியாகத் தலைவர்களைத் தந்த ஈரோட்டு மண்ணின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில், ஈரோட்டில், விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன். ஈரோடு மாவட்ட மக்களின் […]

Loading

செய்திகள்

காதலர்களுக்காக திறந்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள்: மாநில செயலாளர் சண்முகம் தகவல்

சென்னை, ஆக. 25– நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்து உள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவின் விவரம் வருமாறு:– தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு […]

Loading

செய்திகள்

சென்னையில் போக்குவரத்து சப்–இன்ஸ்பெக்டர் தற்கொலை

சென்னை, ஆக. 25– சென்னை தண்டையார் பேட்டை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை தண்டையார் பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவக்குமாருக்கு திருமணமாகி தெரேசா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கோபிகா என்ற மகளும் மோனீஸ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை சிவக்குமார் தனது வீட்டின் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் […]

Loading

செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநிலத்தில் எங்கும் அனுமதிக்க மாட்டோம்: தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை, ஆக.25-– ராமநாதபுரத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மாநிலத்தில் எங்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு மாநில சூற்றுச்சூழல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, ராமநாதபுரம், திருவாடானை, கீழக்கரை ஆகிய தாலுகாவில் உள்ள 20 கிராமங்கள் அடையாளம் […]

Loading

செய்திகள்

அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார்: ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஆக.25-– துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, சென்னையில் நேற்று கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறினார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக பா.ஜ.க. கூட்டணி […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரளா ஆசாமி கைது

சென்னை, ஆக. 25– விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ரெயிலில் கடத்திவரப்பட்ட 13.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒருவரை கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் சென்னை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆபரேஷன் நர்கோஸின் கீழ் ஆர்.பி.எப். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த கோரமண்டல் […]

Loading

செய்திகள்

’’ஏழை மக்களின் கிட்னி திருடும் எம்.எல்.ஏ.வை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்: இபிஎஸ் வேண்டுகோள்

தருச்சி, ஆக.25 – ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணச்சநல்லூர் தொகுதியில் துறையூர் பிரதான சாலையில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே உரையாற்றினார். “மணச்சநல்லூர் என்றாலே பொன்னி அரிசிதான் ஞாபகம் வரும். இங்கு விளையும் அரிசி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த தொகுதியில் பேசுவது மகிழ்ச்சி. நானும் ஒரு விவசாயி, விவசாயிகளின் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்தவன். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிறைய திட்டங்கள் கொடுத்தோம். […]

Loading