செய்திகள்

அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், செப். 18– அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தின் யார்க் கவுண்டியில் உள்ள நார்த் கோடோரஸ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள ஹார் சாலையில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவரது நிலைமையும் […]

Loading

செய்திகள்

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 27 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

சீர்காழி, செப். 18– சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 27 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அரசு மருத்துவமனையில் தாய்சேய் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு டாக்டர்கள் ஊசி போட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு திடீரென நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது […]

Loading

செய்திகள்

விஜய் குறித்து பேச்சு: சீமான் மீது போலீசில் புகார்

மேட்டுப்பாளையம், செப். 17– நடிகர் விஜய்யை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், ஒருமையிலும் பேசியதாக சீமான் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கோவையில் 14–ந் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது .இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது சீமான், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு த.வெ.கவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் த.வெ.க […]

Loading

செய்திகள்

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், செப். 17– கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அந்த மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பெரியாரின் போராட்டங்கள் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார். பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்துக்கு கோட்டயம் மாவட்ட […]

Loading

செய்திகள்

அஜித் நடித்த குட் பேட் அக்லி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம்

சென்னை, செப். 17– நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிகர் அஜித் உள்ளிட்ட பலர் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, ஏஞ்சோடி […]

Loading

செய்திகள்

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை, செப். 17– விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். திருச்சியில் விஜய்யை வரவேற்க த.வெ.க. தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால், அங்கு விஜய் பேசுவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. தொண்டர்கள் சூழ்ந்ததால், சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடந்து பிரச்சாரம் செய்வதற்கான இடத்திற்கு வர சுமார் 5 மணி […]

Loading

செய்திகள்

வாழ்க்கை வரலாற்றுப்படம்: பிரதமர் மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்

திருச்சூர், செப். 17– நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார். ’மா வந்தே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கிராந்தி குமார் இயக்குகிறார். “பிரதமர் மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக உள்ளது. அதுகுறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது. மோடியின் வாழ்க்கையை திரைப்படமாக சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘மா வந்தே’ என்று […]

Loading

செய்திகள்

பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சா கடத்தல்: 3 வடமாநில ஆசாமிகள் கைது

ஆவடி, செப். 16– பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வடமாநில ஆசாமிகள் 3 பேரை கைது செய்தனர். பூந்தமல்லி பைபாஸ் வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலியிடத்தில் 3 பேர் கஞ்சாவை விற்பனை செய்ய எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் டி.சுபாஷினி தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் கொண்ட குழு சம்பவ இடம் சென்று […]

Loading

செய்திகள்

மதுரை தொழிலதிபர் கொலை: பங்குதாரர் உள்பட 7 பேர் கைது

மதுரை, செப். 16– மதுரை தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை ஏவி கொலை செய்த பங்குதாரர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை பார்க் டவுன் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). தொழிலதிபரான இவர், முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டு, வாள் உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

திருச்சியில் விஜய் பிரசாரத்தில் அரசு, தனியார் சொத்துக்கள் சேதம்: த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு

திருச்சி, செப். 16– திருச்சியில் விஜய் பிரசாரத்தின் போது அரசு, தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின் முதல் சுற்று பயணத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கினார். இதில் கூடிய கூட்டம் திருச்சியை குலுங்க வைப்பதாக அமைந்தது. திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரசாரம் நடந்த மரக்கடை வரை 8 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் […]

Loading