செய்திகள்

2 நாள் பயணமாக மு.க.ஸ்டாலின் 29–ந்தேதி ராமநாதபுரம் செல்கிறார்

ராமநாதபுரம், செப். 19– 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28–ந்தேதி ராமநாதபுரம் செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் செல்ல உள்ளார். 29ந் தேதி மாலை பரமக்குடிக்கு செல்லும் முதலமைச்சர் கட்சி […]

Loading

செய்திகள்

அமெரிக்க போலீசாரால் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

உடலைக் கொண்டு வர உதவிட மத்திய அரசுக்கு பெற்றோர் கடிதம் வாஷிங்டன், செப். 19– அமெரிக்காவில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வந்த தெலுங்கானாவை சேர்ந்த மாணவரை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசின் உதவியை அவரது குடும்பத்தினர் நாடியுள்ளனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்த முகமது நிஜாமுதீன் (வயது 30), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புளோரிடா கல்லூரியில் முதுநிலைப் […]

Loading

செய்திகள்

விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த ‘மனநலம்’ பாதித்த இளைஞர் மீட்பு; வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சென்னை, செப். 19– தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் வீட்டில் பலத்த பாதுகாப்பையும் மீறி மொட்டை மாடியில் பதுங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் மீட்டனர். இந்நிலையில் அடுத்து விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டின் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பதுங்கி இருந்துள்ளார். […]

Loading

செய்திகள்

‘ரோபோ’ சங்கர் மரணம்: திரையுலகம் கண்ணீர் அஞ்சலி

* சின்னத்திரையில் நகைக்சுவை நடிகராக அறிமுகம் * விஜய், தனுஷ், அஜித்துடன் நடித்தவர் சென்னை, செப். 19– பிரபல திரைப்பட நடிகர் ‘ரோபோ சங்கர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் சத்தியராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கமல், விஜய், […]

Loading

செய்திகள்

நாளை நாகையில் விஜய் பிரச்சாரம்: கட்டுப்பாடுகளை விதித்த போலீசார்

* பொதுமக்கள்–போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது * பொதுச் சொத்துக்கு தொண்டர்களால் சேதம் ஏற்படக்கூடாது நாகை, செப். 19– நாகை மாவட்டம், புத்தூர் அண்ணா சிலை அருகே நாளை (20ந் தேதி) பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்க்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கி உள்ளனர். அடுத்தாண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்சித் தலைவர்கள் பல்வேறு கட்டங்களாக சுற்றுப் பயணங்கள் […]

Loading

செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றாத தி.மு.க. அரசு: அண்ணாமலை கடும் தாக்கு

சென்னை, செப். 18– ‘‘தேர்தல் வாக்குறுதிகளில் 10%ஐக் கூட முழுமையாக நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை’’ காட்டமாகக் கூறினார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:- ‘‘ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க. அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள […]

Loading

செய்திகள்

உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு; வீடுகள் இடிந்தன: 5 பேர் மாயம்

டேராடூன், செப். 18– உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் இன்று அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றை முன் தினம் டேராடூனில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக தம்சா […]

Loading

செய்திகள்

சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னை, செப். 18– சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் பகுதியில் இன்று அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ராமகிருஷ்ணா வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று சென்னை செளகார்பேட்டையில் தங்க நகை வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் மோகன்லால் காத்ரியின் புரசைவாக்கம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும்: ஒப்பந்தம் கையெழுத்து

கத்தார், செப். 18– பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதியைத் தாக்கியதாக கருதி பதிலடி கொடுக்கப்படும் என்ற முக்கிய ஒப்பந்தம் கையொப்பம் ஆக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கிய பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது சவுதியை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் […]

Loading

செய்திகள்

போதைப் பொருள் கடத்தலில் இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு: டிரம்ப்

வாஷிங்டன், செப். 18– போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, தி டொமினிசியன் ரிபப்ளிக், ஈகுவேடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைதி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாராகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசுலா […]

Loading