செய்திகள்

காதல் விவகாரத்தில் வாலிபர் ஓடஓட வெட்டிக் கொலை: சிறுமியின் தந்தை உள்பட 4 பேர் கைது

திருச்செந்தூர், செப். 23– காதல் விவகாரத்தில் வாலிபர் ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி நகர் குடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன். இவருக்கும் திருச்செந்தூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது மகளை காணவில்லை […]

Loading

செய்திகள்

உலக பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர், செப். 23– குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா பெருந் திருவிழா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும். அதன்படி, குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று தொடங்கி, அக்டோபர் 2–ந் தேதி மகிசாசூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை, செப். 23– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் உள்ள அவர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் […]

Loading

செய்திகள்

செங்கோட்டையன் தொகுதியில் எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு, செப்.23– செங்கோட்டையன் தொகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு இன்று தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணா தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 6 மணி அளவில் சேலத்தில் உள்ள தனது […]

Loading

செய்திகள்

ஆதிதிராவிடர் – பழங்குடி இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சிப் பட்டறை : உதயநிதி துவக்கி வைத்தார்

சென்னை, செப் 23– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் அரசு சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களின் ஓவியம் மற்றும் சிற்ப கலை படைப்புகளையும், பழங்கால பாரம்பரிமிக்க இசைக்கருவிகளையும் பார்வையிட்டு, இசைக்கலைஞர்கள் அந்த இசைக்கருவிகளைக் கொண்டு பல்வேறு விதங்களில் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்

வாஷிங்டன், செப். 22– அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அமெரிக்காவின் வடமேற்கு இண்டியானா மாகாணத்தில் ஒரு பிரபல ஷாப்பிங் மால் உள்ளது. இந்த ஷாப்பில் மாலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் அடையாளத்தை […]

Loading

செய்திகள்

ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

ஜெருசலேம், செப். 22– பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்த ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: பாலஸ்தீனம் என்னும் ஒரு நாடு இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் முயற்சிகளுக்கு நான் அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு திரும்பிய […]

Loading

செய்திகள்

அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி சீர் திருத்தம்: புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

புதுடெல்லி,செப். 22– ஜிஎஸ்டி சீர் திருத்தம் தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஎச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3-ந் தேதி டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மக்களுக்கு பயன்படும் முறையில் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற பொருட்களுக்கு 5 மற்றும் 18 சதவீதம் என்ற 2 அடுக்கு […]

Loading

செய்திகள்

சார்லி கிர்க் நினைவு அஞ்சலி: ஒன்றிணைந்த டிரம்ப்–மஸ்க்

அரிசோனா, செப். 22– சார்லி கிர்க் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் – எலான் மஸ்க் ஆகியோர் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளர் நண்பர் சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 10–ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மரணம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் 22 வயது வாலிபர் டைலர் ராபின்சன் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் ஒரு சவரன் ரூ.83 ஆயிரத்தை நெருங்கியது

வெள்ளி ஒரு கிராம் ரூ.148க்கு விற்பனை சென்னை, செப். 22– தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 என உயர்ந்து, ரூ.82,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்​ளிட்ட பல்வேறு காரணங்​களால், தங்​கம் விலை அதிரடி​யாக உயர்ந்​து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை புதிய உச்சத்தை கண்டு வருகிறது. […]

Loading