செய்திகள்

குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வை 75 சதவீதம் பேர் எழுதினர்

சென்னை, செப்.29-– குரூப்-–2, 2ஏ முதல்நிலைத் தேர்வை எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்த நிலையில், 75.64 சதவீதம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்தார். உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை–-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்–-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், […]

Loading

செய்திகள்

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது: ஐ.நா. சபையில் ஜெய்சங்கர் பேச்சு

நியூயார்க், செப்.29- ”உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக எங்கள் அண்டை நாடு உள்ளது. பல தசாப்தங்களாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டிலிருந்துதான் வருகின்றன” என ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை கடுமையாக சாடி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். நியூயார்க்கில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் நீண்டகால எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் 80-வது பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் […]

Loading

செய்திகள்

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம்: விஜய் அறிவிப்பு

மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை; நொறுங்கி போய் இருக்கிறேன் சென்னை, செப்.28– கரூரில் நேற்று நடந்த த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் […]

Loading

செய்திகள்

போலீஸ் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது: எடப்பாடி பேட்டி

கரூர், செப்.28– விஜய் கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்று எடப்பாடி கூறினார். கரூரில் த.வெ.க. விஜய் பரப்புரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு கரூர் மருத்துவமனையில் அண்ணா திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அஞ்சலி செலுத்தினார். இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனைக்குள் சிகிச்சை பெற்று வருபவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் வழங்கினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘’நேற்றைய தினம் கரூரில் […]

Loading

செய்திகள்

நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் அடையாளம் தெரிந்தது

கரூர், செப்.28– கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளன. கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் […]

Loading

செய்திகள்

கரூர் உயிரிழப்பு சம்பவம்: ஜனாதிபதி, பிரதமர், தலைவர்கள் இரங்கல்

சென்னை, செப். 28– தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது […]

Loading

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்
செய்திகள்

கரூர் சோகம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கரூர், செப். 28 – கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இரவோடு இரவாகக் கரூர் பயணம்: நேற்று (சனிக்கிழமை) இரவு சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், பின்னர் திருச்சியில் விமானம் மூலம் வந்து […]

Loading

செய்திகள்

கரூர் த.வெ.க. கூட்டத்தில் பெரும் சோகம்: நெரிசலில் சிக்கி 39 பேர் பலி; பலர் படுகாயம்

கரூர், செப். 28 – கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு விவரம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த தகவலின்படி, […]

Loading

செய்திகள்

நாமக்கல்லில் விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

நாமக்கல், செப். 27– நாமக்கல்லில் இன்று 3–ம் கட்ட பிரச்சாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் துவக்கினார். பிரச்சாரத்திற்கு வந்த விஜய்க்கு வழி நெடுகிலும் த.வெ.க. தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தார்கள். கட்சி கொடிகளை அசைத்து வாழ்த்து கோஷம் எழுப்பியும் ஆரவாரம் செய்தார்கள். தொண்டர்கள் கூட்டத்தால், அவரது பிரச்சார வாகனம் மெல்ல ஆமை வேகத்தில் நகர்ந்து வந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிரச்சார இடத்திற்கு வர முடியவில்லை. பல மணி நேரம் தாமதமாகவே வந்தார். “தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் […]

Loading

செய்திகள்

பிஎஸ்என்எல் 4ஜி சேவை: பிரதமர் மோடி துவக்கினார்

புவனேஸ்வர், செப். 27– ஒடிசாவின் ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரெயில்வே மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவையையும் சுதேசி தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட 97,500க்கும் மேற்பட்ட 4ஜி தொலைத்தொடர்பு கோபுரங்களையும் அவர் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு துவக்கப்பட்டுள்ளது. […]

Loading