செய்திகள்

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தவெக மனு

புதுடெல்லி, அக். 7– கரூரில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டர்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 பேர் […]

Loading

செய்திகள்

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை, அக். 7– தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் […]

Loading

செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே நான் சொன்னதால் தான் போரை நிறுத்தினார்கள்

நியூயார்க், அக். 7– கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். வரிகளை வைத்தே அமைதியே ஏற்படுத்துகிறோம் என்றும் அவர் கூறினார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட உலக அளவில் 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்தாலும் டிரம்ப் மீண்டும் மீண்டும் இதே […]

Loading

செய்திகள்

சென்னையில் செப்டம்பர் மாதம் 121 சைபர் குற்றங்களில் ரூ. 1.27 கோடி மீட்பு

சென்னை, அக். 7– சென்னையில் செப்டம்பர் மாதம் 121 சைபர் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,27,48,074 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மூலமாக பல்வேறு சைபர் குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்படும் பொதுமக்களின் புகார்களை 1930 என்ற அவசர அழைப்பு மூலமாக அல்லது நேரடியாக வழங்கப்படும் புகார்களை பெற்று துரிதமாக நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய விசாரணை மூலம் பணம் இழந்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் பணத்தை மீட்டு தர […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உச்சம்; தங்கம் ஒரு சவரன் ரூ.88 ஆயிரத்தை கடந்தது

கிராம் ரூ.11,060க்கு விற்பனை சென்னை, அக்.6– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு […]

Loading

செய்திகள்

ஜெய்ப்பூர் மருத்துவமனையில் தீ விபத்து: 7 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூர், அக். 6– ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையின் ஐசியுவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) வார்டில் 11 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். இந்த தீ விபத்தில் நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர். […]

Loading

செய்திகள்

அண்ணாமலை பெயரை சொல்லி ரூ. 10 லட்சம் மோசடி: பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது

கோயம்புத்தூர், அக். 6– தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைச் சொல்லி ரூ. 10 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் -– நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று, ரூ.50 லட்சம் இழப்பீடு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த […]

Loading

செய்திகள்

‘கோல்ட்ரிப்’ மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை, அக்.6- ‘கோல்ட்ரிப்’ மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தின் கீழ் பதிவு செய்த 300 குழந்தைகளுடன் ஒரு நாள் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது, குழந்தைகளுக்கு பிடித்த உடைகளை வாங்கி தந்து இனிப்புகள் வழங்கினார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிர மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- அன்புக்கரங்கள் திட்டத்தின் […]

Loading

செய்திகள்

இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம்: அனைத்து மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி, அக்.6- இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மருந்து தயாரிப்பு நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் கூட்டாக ஆய்வு செய்ய, முடிவு செய்யப்பட்டது. மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மற்றும் சளி மருந்துகளால் குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே குழந்தைகள் இறப்பு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் […]

Loading

செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து

விருதுநகர், அக். 5– சிவகாசி அருகே பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறியது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோனம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த கடையில் இன்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசுகளை விற்பனை செய்து கொடிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகளை சேகரித்து வைத்திருந்த குடோனில் இருந்து புகை வெளியேறியது. இதனைக்கண்ட பணியாளர்கள் அலறியடித்துக்கொண்டு […]

Loading