செய்திகள்

சென்னை அடையாறு முகத்துவாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை, அக்.24– சென்னை அடையாறு முகத்துவாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை, கடந்த 16-ந் தேதி தமிழகத்தில் தொடங்கியது. சற்று தாமதமாக தொடங்கினாலும், அதன் வேகம் மிக தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததால் அதற்கேற்ற வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் […]

Loading

செய்திகள்

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை, அக். 24– தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த நிலை அப்படியே மாறியது. இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகியுள்ளது. இது குறித்து இந்திய […]

Loading

செய்திகள்

தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி

கோவை, அக். 23– கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்துள்ளது. கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 25 வயது ஆண் காட்டு யானை ஒன்று தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம், ராமன் குட்டை என்ற பகுதியில் உள்ள […]

Loading

செய்திகள்

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

வாஷிங்டன், அக். 23– ரஷ்யாவின் மிகப்பெரிய 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். தற்போது ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்த இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை […]

Loading

செய்திகள்

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

சென்னை, அக். 23– வங்கக் கடலில் நாளை (24–ந்தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக 25–ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என அறிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகுமா அல்லது வலுவிழக்குமா என்பதை இதன் நகர்வை பொருத்துதான் கணிக்கப்படும். நாளை உருவாகும் […]

Loading

செய்திகள்

பீகார் தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்

பாட்னா, அக். 23– பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். பீகார் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு […]

Loading

செய்திகள்

ஆசியான் மாநாட்டை புறக்கணித்த மோடி: காணொலி மூலம் பங்கேற்கிறார்

கோலம்பூர், அக். 23– மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வரும் 26–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை 3 நாட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கியத் […]

Loading

செய்திகள்

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு :

சென்னை 23: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

Loading

செய்திகள்

திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த சட்டமன்றத் தேர்தலில், சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. இவருக்கு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இருந்த நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை, வீட்டில் ஓய்வெடுத்து வந்த பொன்னுசாமிக்கு திடீரென்று இதயத்தில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு […]

Loading

செய்திகள்

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் உள் மோதல் தீவிரம் – புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா அணிகள் மோதலில்

சென்னை, அக்டோபர் 22 நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK)-இல் உள் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. கட்சியின் முக்கிய தலைவர்களான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாஅணிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் தற்போது வெளிப்படையான போட்டியாக மாறியுள்ளன. கட்சித் தகவல்களின் படி, இருவருக்கும் இடையிலான மனக்கசப்பு பல வாரங்களாக நீடித்து வந்ததாகவும், தற்போது அது சமூக ஊடகங்களில் வெளிப்படையாக மோதலாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனந்த் மற்றும் அர்ஜுனா இருவரும் கட்சியின் அமைப்பு, பிரச்சாரம் மற்றும் திட்டமிடலில் முக்கிய பங்குகளை வகிக்கின்றனர். கட்டுப்பாடு, […]

Loading