செய்திகள்

சென்னையில் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது

சென்னை மாநகராட்சி தகவல் சென்னை, அக்.29– சென்னையில் மழைநீர் வடிகால், கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த 17–ந் தேதி அன்று காலை 8.30 மணி முதல் இன்று (29–ந் தேதி) காலை 8.30 மணி வரை சராசரியாக சென்னையில் 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று (28–ந் தேதி) காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 8.99 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. […]

Loading

செய்திகள்

உலக சிக்கன நாள்: சிக்கனம் கடைப்பிடிப்போம்; சிறப்பாக வாழ்வோம்’: ஸ்டாலின் வாழ்த்து

நாளை (30–ந் தேதி) உலகசிக்கனநாள். இதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:– சிக்கனம் கடைப்பிடிப்போம், சேமிப்போம், சிறப்பாக வாழ்வோம். ஆண்டுதோறும் அக்டோபர் 30–ம் நாள் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் “உலக சிக்கன நாளாக” கொண்டாடப்பட்டு வருகிறது. வருவாயை உயர்த்தியும், செலவுகளை களைந்தும் திறம்பட வாழவேண்டும் என்பதை திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பொதுமறையாம் திருக்குறளில், ‘வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை’ ‘வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் […]

Loading

செய்திகள்

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள்

சென்னை, அக். 29– சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவம்பர் 1-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. செங்கோட்டை -தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681, 20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து நவம்பர் 1-ந் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காசா போர் நிறுத்தம்: ஆபத்தான அமைதி?

தலையங்கம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 10 ந்தேதி அமலுக்கு வந்தது. ஆனால், பல மீறல்கள், குற்றச்சாட்டுகள், மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக அந்த அமைதி, மிக ஆபத்தான நிலையில் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 20 அம்சம் கொண்ட “பெரும் அமைதி திட்டம்” மூலம் 2 ஆண்டுகளாக நீடித்த காசா போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் விளைவுகள் இன்னும் மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மறுசீரமைப்பு செய்து […]

Loading

செய்திகள்

30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு: பணியாளர்கள் அதிர்ச்சி

சென்னை, அக். 28– 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அந்த நிறுவனத்தின் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஐடி துறையில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால், ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாப்ட், மெட்டா உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை கணிசமான […]

Loading

செய்திகள்

நெருங்கியது ‘மோந்தா’ புயல்: இரவு காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது

சென்னை, அக்.28– வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இன்று மாலை அல்லது இரவு மசூலிபட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. தற்போது மோந்தா […]

Loading

செய்திகள்

‘‘காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்’’: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்

கரூர், அக். 28– கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர். கரூரில் செப்டம்ர் 27–ந் தேதியில், விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த 3 நாள்கள் பிறகு, பாதிக்கப்பட்டோரை விடியோ அழைப்பில் தொடர்புகொண்ட விஜய், அவர்களை விரைவில் சந்திப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரை சென்னைக்கு வரவழைத்து, நேற்று மாமல்லாபுரத்தில் […]

Loading

செய்திகள்

‘சார்’ என்றாலே தி.மு.க.வினருக்கு அலர்ஜி: நயினார் நாகேந்திரன்

கோவை, அக். 28– ‘சார்’ என்றாலே தி.மு.க.வினருக்கு ஒரு அலர்ஜி என்று நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. பருவமழை பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு, அந்தந்த மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். தி.மு.க.வினருக்கு […]

Loading

செய்திகள்

வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வந்து செல்ல புது வழிகாட்டு முறைகள் வெளியீடு

வாஷிங்டன், அக். 28– வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்கா வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு முறைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது வரும் டிசம்பர் 26–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் வெளிநாட்டவர்கள் விவகாரத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்கா வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு முறைகளை அமெரிக்க […]

Loading

செய்திகள்

5 ஆண்டுக்கு பின் கொல்கத்தாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை

கொல்கத்தா, அக். 27– மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்ஷோ நகருக்கு விமான சேவை நேற்று துவங்கியது. இதன் மூலம் ஐந்து ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த இந்தியா -– சீனா இடையிலான விமான சேவை மீண்டும் துவங்கியது. நம் நாட்டுக்கும், நம் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே, கடந்த 2002 முதல் நேரடி விமான போக்குவரத்து சேவையை சீன ‘ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் அளித்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 2020ல் இரு நாடுகளுக்கு இடையிலான […]

Loading