செய்திகள்

பெரம்பலூர் அருகே பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

பெரம்பலூர், ஜன. 27: பெரம்பலூர் அருகே பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி வெள்ளைகாளி. இவர் மீது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வழக்கு ஒன்றில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வெள்ளைகாளி ஆஜர்படுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பின்தொடர்ந்து இரண்டு கார்களில் ரவுடி […]

Loading

செய்திகள்

தவெகவுடன் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் விரும்பினார்

கோவை, ஜன. 27– தவெகவுடன் கூட்டணி வைக்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரும்பியதாக தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்துக்கு வருகைதந்த செங்கோட்டையனிடம், தவெக மீதான அண்ணா தி.மு.க. விமர்சனம், அண்ணா தி.மு.க. கூட்டணியில் தினகரன் இணைந்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு பதிலளித்து செங்கோட்டையன் கூறியதாவது:– பா.ம.க. ராமதாஸ் தவெகவுடன் பேசியதாக செய்தி பார்த்தேன், நல்லது நடக்கட்டும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் […]

Loading

செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தமிழகத்துக்கும் இடையேதான் போட்டி

தஞ்சாவூர், ஜன.27- நடைபெற உள்ள தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தமிழகத்துக்கும் இடையேதான் போட்டி என்று தஞ்சையில் நடந்த தி.மு.க. மகளிர் அணி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கூறினார். தஞ்சையை அடுத்த செங்கிப் பட்டியில் டெல்டா மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டுக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு வரவேற்றார். மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை […]

Loading

செய்திகள்

ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் ; தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

சென்னை, ஜன. 27– நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி. ஆஷா விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படத்துக்கு தணிக்கை சான்று […]

Loading

செய்திகள்

தென் கொரியா பொருட்களுக்கு 10% கூடுதல் வரி: டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன், ஜன. 27– தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்திருக்கிறார். உலக நாடுகள் தனது பேச்சை கேட்கவில்லை என்றால் வரி விதிப்பேன் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். பின்னரும் தனது உத்தரவுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கூடுதலாக வரி விதிப்பது அதிபர் டிரம்ப் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் […]

Loading

செய்திகள்

வேலூர் விஐடி பழைய மாணவர் சந்திப்பு: கவின்கேர் தலைவர் ரங்கநாதன் பேச்சு

சென்னை, ஜன. 27: ‘வாழ்க்கையிலும், தொழிலிலும் வாய்ப்புகளை அடையாளம் கண்டு தீவிரமாக இறங்கி எதிர்கொள்பவர்களே வெற்றி பெறுகின்றனர்’ என கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் – மேலாண் இயக்குநர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று விஐடியில் சந்தித்து சங்கத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதிப்பது வாடிக்கை. அதன்படி 31-–வது ஆண்டு சந்திப்பு நிகழ்வு வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பங்கேற்று இருந்தனர்.இதில் […]

Loading

செய்திகள்

உயர்ரக ‘நவரத்தினா’ அந்தஸ்தை பெற சென்னை பெட்ரோலியம் இலக்கு

சென்னை, ஜன. 27: சென்னை பெட்ரோலியம் 60 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு, படிப்படியாக உயர்ந்து ‘ஏ’ ரக ‘நவரத்தினா’ அந்தஸ்தை பெற இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது என்று நிர்வாக இயக்குனர் எச். சங்கர் தெரிவித்தார். சென்னை பெட்ரோலியம் மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் 77வது குடியரசு தினம் ஒற்றுமை மற்றும் நோக்கத்தின் வலுவான உணர்வுடன் கொண்டாடப்பட்டது. நிர்வாக இயக்குனர் எச். சங்கர் தேசியக் கொடியை ஏற்றி மத்திய பாதுகாப்பு படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்நிறுவனத்தின் செயல்பாடு […]

Loading

செய்திகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குடியரசு தினவிழா

சென்னை-, ஜன. 27: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மத்திய அலுவலகத்தில் தாய் திருநாட்டின் குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சீருடை அணிந்த இவ்வங்கியின் பாதுகாப்பு பணியாளர்களது மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசிக்க பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இவ்விழாவில் செயல் இயக்குனர் தனராஜ் .டி, தலைமை கண்காணிப்பு அதிகாரி ராஜீவ் குமார், […]

Loading

செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாமக்கல், ஜன. 27: அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நாமக்கல் சாலப்பாளையத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:– “ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. காளை அடக்கும் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் அற்புதமான விளையாட்டு […]

Loading

செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு

சென்னை, ஜன. 27: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க.வுக்கு இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் (தமிழக விவசாயிகள் சங்கம்) மாநிலத் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் தலைமையில், அக்கட்சியின் மாநில செயலாளர் விஜயகுமார், துணைத்தலைவர் பொன்.மாணிக்கம், இணைச்செயலாளர் பரந்தாமன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆஞ்சநேயலு, நிதி காப்பாளர் மு.ஹரிகரன், இளைஞர் […]

Loading