செய்திகள் முழு தகவல்

டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச. 16: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை, திருவள்ளூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த மண்டலக் குழுத்தலைவர்களிடம் தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக திருவள்ளூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற […]

Loading

செய்திகள் முழு தகவல்

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூண் அல்ல

மதுரை, டிச. 15: ‘திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூணல்ல, சமணர் காலத்துத் தூண்’ என்று கோர்ட்டில் கோவில் நிர்வாகம் வாதாடியது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிகுமார் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Loading

செய்திகள் முழு தகவல்

சோனியா காந்தி மன்னிப்பு கேட்க ஜெ.பி. நட்டா வலியுறுத்தல்

புதுடெல்லி, டிச. 15: பார்லிமெண்டில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியது குறித்து ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்தினர். பார்லிமெண்டில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் […]

Loading

செய்திகள் முழு தகவல்

ரூ.120 கோடியில் சீரமைப்பு பணி: சோழவரம் ஏரி பாதுகாப்பாக உள்ளது

சென்னை, டிச. 15: ரூ.120 கோடியில் சோழவரம் ஏரியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏரி பாதுகாப்பாக உள்ளது என்று சென்னை மண்டல நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று சோழவரம் ஏரியாகும். இந்த ஏரி திருவள்ளூர் மாவட்டம். பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 1891–ல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, 1970–ம் ஆண்டு காலத்திலிருந்து மூன்று முறை கரையின் […]

Loading

செய்திகள் முழு தகவல்

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடும் கண்டனம்

சென்னை, டிச.15: மக்களின் நாடித் துடிப்பை அறியாமல், ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் இடங்கள் காலியாக உள்ள நிலையில், ‘மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களே இல்லை’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் பொய் சொல்கிறார் என முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவமனைகள் உட்பட பல அலுவலகங்களில் காலிப் […]

Loading

செய்திகள் முழு தகவல்

அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

திருவண்ணாமலை, டிச. 15: ‘அன்போடு வந்தால் அரவணைப்போம், ஆணவத்துக்கு அடிபணியமாட்டோம்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் திருச்சி […]

Loading

செய்திகள் முழு தகவல்

பா.ம.க.விலிருந்து விலகத் தயார்: ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி

சென்னை, டிச. 15: பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான அதிகார மோதல் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக ராமதாஸ் பின்னால் இருப்பவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர் என்று அன்புமணி தரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அதிலும் ஜி.கே.மணி மீது கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இவரை துரோகி என்று அன்புமணி தரப்பு விமர்சித்துள்ளது. நேற்றைய தினம் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் […]

Loading

செய்திகள் முழு தகவல்

ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

அமராவதி, டிச. 12: ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் தனியார் பேருந்து ஒன்றில் பத்ராசலம் பகுதியில் உள்ள ராமர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அங்கு தரிசனம் முடிந்த பிறகு அன்னாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Loading

செய்திகள் முழு தகவல்

வடசென்னையில் வேகமாக உருவாகி வரும் எஸ்பிஆர் சிட்டி டவுன்ஷிப் திட்டம்

சென்னை, டிச. 5: எஸ்பிஆர் கட்டுமான நிறுவனத்தின் எஸ்பிஆர் சிட்டி திட்டம், உலகின் முன்னணி மாற்று முதலீட்டு நிறுவனத்தில் ஒன்றான ஓக்டிரி கேபிடல் நிறுவனத்திடமிருந்து ரூ.750 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. 209 பில்லியன் (அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துகளை மேலாண்மை செய்யும் ஓக்ட்ரீயின் இந்த முதலீடு, சென்னையின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எஸ்பிஆர் சிட்டி டவுன்ஷிப்–இன் வலுவான அடிப்படைகளில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இந்த முதலீடு எஸ்பிஆரின் முக்கிய வணிகத் திட்டங்களுக்கு வேகத்தை கூட்டும், முக்கிய வர்த்தகத் […]

Loading

செய்திகள் முழு தகவல்

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க தி.மு.க. முயற்சி: எடப்பாடி கடும் கண்டனம்

சென்னை, டிச.5: நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிக்கும் தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகாட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம் முதல் ஏழை , எளிய மக்களுக்கும்; முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கும், விலையில்லா வேட்டி, சேலை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலங்களில் தரமான […]

Loading