செய்திகள் முழு தகவல்

‘100 சதவீத உழைப்பைக் கொடுத்து தேர்தல் களப்பணி ஆற்ற வேண்டும்: ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 21: 100 சதவீத உழைப்பை கொடுத்து தேர்தல் களப்பணியாற்றுங்கள் என்று தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் முதல் வாரம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-– பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, […]

Loading

செய்திகள் முழு தகவல்

சென்னை கோவளத்தில் “மாமல்லன்” நீர்த்தேக்கம் அமைக்கும் பணி : ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஜன. 19: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் கோவளம் உபவடிநிலப் பகுதியில் 5,161 ஏக்கர் பரப்பளவில் 342 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் நீர்த்தேக்கத்திற்கு “மாமல்லன்” என்று பெயர் சூட்டி, நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 34 கி.மீ […]

Loading

செய்திகள் முழு தகவல்

தி.மு.க. ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம்: அமித்ஷா ஆவேசம்

புதுக்கோட்டை, ஜன.5-– இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால், அது தமிழகத்தின் தி.மு.க. ஆட்சி தான், எப்பாடு பட்டாவது சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம் என்று புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பிலான யாத்திரை மேற்கொண்டார். அதன் நிறைவு விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பாலன்நகரை அடுத்த பள்ளத்திவயலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு […]

Loading

செய்திகள் முழு தகவல்

பொங்கல் பண்டிகை கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு: நாளை டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

சென்னை, டிச. 3: பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே கூடுதல் சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06012) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் […]

Loading

செய்திகள் முழு தகவல்

இறந்தவர்கள் வந்து இனி ஓட்டுபோட முடியாதே என பயம் வந்துவிட்டது எடப்பாடி பேட்டி

சேலம், டிச. 22: எஸ்.ஐ.ஆரை பார்த்து ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார், கதறுகிறார் என எடப்பாடி பழனிசாமி கேட்டார். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இணையலாம்” என அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் எம்.எல்.ஏ. திட்ட நிதியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் எடப்பாடி பேசும்போது கூறியதாவது:– […]

Loading

செய்திகள் முழு தகவல்

‘ரிமோட்’ நீர்மூழ்கிக் கலம் மூலம் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித் தன்மை ஆய்வு துவங்கியது

சென்னை, டிச. 22: முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை இன்று ‘ரிமோட்’ நீர்மூழ்கிக் கலம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நெல்சாகுபடி நடக்கிறது. முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பதுடன், பாசனத்திற்கு போக உபரியாக வைகை அணைக்கு திறக்கப்படும் நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய பணிகளும் நடக்கிறது. […]

Loading

செய்திகள் முழு தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடிய விடிய போராட்டம் 700 செவிலியர்கள் கைது

எடப்பாடி, அண்ணாமலை கண்டனம் சென்னை, டிச. 19: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு, செவிலியர்களுக்கு வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணி […]

Loading

செய்திகள் முழு தகவல்

அமெரிக்க வரிவிதிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுங்கள் பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, டிச.18: இந்தியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பினால், தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்திய -அமெரிக்க இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டின் ஏற்றுமதித் துறைகளில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் குறித்து அவசரமாகவும், கவலையோடும் இதனை எழுதுவதாகக் […]

Loading

செய்திகள் முழு தகவல்

தி.மு.க. ஒரு தீயசக்தி, த.வெ.க. ஒரு தூயசக்தி என்று விஜய் ஆவேசம்

ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் […]

Loading

செய்திகள் முழு தகவல்

“எம்.ஜி.ஆருக்கு அடுத்தது விஜய்–தான்”: ஈரோட்டில் செங்கோட்டையன் பெருமிதம்

ஈரோடு, டிச. 18: மக்களுக்காக புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் 500 கோடி வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளார் என்றும் அவர் கூறினார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் இன்று தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக தவெக தலைவர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக […]

Loading