சென்னை, நவ. 3–
புனித தோமையர்மலை பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் புனித தோமையர் மலை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து ஆலந்தூர், மடுவங்கரை பாலம் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் ஓஜி கஞ்சா மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் போதைப்பொருள் வைத்திருந்த வள்ளுவர் மனோஜ்குமார், பெர்னார்டு டிசில்வா, மனீஷ் சௌத்ரி, ஆனந்த் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 150 கிராம் எடை கொண்ட ஓஜி கஞ்சா, 1.05 கிலோ கஞ்சா மற்றும் 3 ஐபோன்கள் உட்பட 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
![]()





