செய்திகள்

99 பயணளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்

Makkal Kural Official

காஞ்சிபுரம் டிச.24

உத்திரமேரூர் அரும்புலியூர் ஊராட்சி கரும்பாக்கத்தில் 99 பயனாளிகளுக்கு ரூ.92.86 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ஆகியோர் வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் நிலமற்ற 16826 பயனாளிகளுக்கு 285.13 கோடி மதிப்பீட்டிலும் அரசு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 2021 – 2025 ஐந்தாண்டில் மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30644 பயனாலிகளுக்கு 413.62 கோடி மதிப்பீட்டில் அரசு நிலத்தில் இலவச வீட்டுமை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவற்றுள் 4739 பழங்குடியின பயனாளிகள் (பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் 440 பயனாளிகள்) 211 மாற்றுத்திறனாளி பயணளிகள். 138 திருநங்கை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்துநேற்று காஞ்சிபுரம் மாவட்டம். உத்திரமேரூர் வட்டம், அரும்புலியூர் ஊராட்சி கரும்பாக்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் 99 பயனாளிகளுக்கு ரூ.9286 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிார்கள்.

வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளி திவ்யா மற்றும் நளினி ஆகியோர் கூறுகையில், இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலனோர் 70 வருடங்களாக இங்கு வசித்து வருகிறார்கள். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா எதும் இல்லாததால் தேவையான வசதிகள் செய்து கொள்ள முடியாமல் குழந்தைகளுடன் நிம்மதியற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வந்த அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளனர். பட்டா பெற்ற நங்கள் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொள்வதற்கு மட்டுமின்றி எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக அமையும். தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என்று கூறினர்.

இந்நிகழ்வில் துணை ஆட்சியர் வட்டாட்சியர் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஒன்றிய செயலாளர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்ராமன், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், ஒன்றிய பொருளாளர் பாலமுருகன் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *