சென்னை, அக். 26–
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக (மோன்தா) வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5.30 மணிக்கு மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது.
இதனை தொடர்ந்து தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் (28–ந்தேதி) மாலை அல்லது இரவு மச்சிலிப்பட்டினம்–கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





