சென்னை, ஜன.20–
ராஐஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற 69வது தேசிய பள்ளி சதுரங்க போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்டது இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு. இந்த அமைப்பானது பள்ளி விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளை நடத்தி ஏசியன், காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகளுக்கு புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது.
ஏசியன், காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகளுக்கு தகுதிபெறும் நோக்கோடு பள்ளியில் பயிலும் போதே தகுந்த- ஆர்வமான வீரர்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பது இதன் முக்கிய நோக்கம். முக்கியமாக இது இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு.
இந்த ஆண்டு 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 69வது தேசிய பள்ளி சதுரங்க போட்டி (SGFI) ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் ஜார்கண்ட் விளையாட்டு மற்றும் இளைஞர் சேவை இயக்குனரகம் சார்பில் ஜனவரி 13–ம் தேதி துவங்கி 16ம் தேதி வரை நடந்தது.
இதில் தமிழ்நாடு, குஜராத் மாகாராஷ்ட்ரா உட்பட 20 மாநில அணிகளும், நான்கு யூனியன் பிரதேச அணிகளும், சி.பி.எஸ்.பி., உட்பட 9 பள்ளி வாரிய அணிகளும் சேர்த்து மொத்தம் 31 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
இதில் சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவின் சதுரங்க அணியானது செப்டம்பர் மாதம் ராஐஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று சிபிஎஸ்இ வாரிய அணி சார்பாக பங்கேற்க இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்புக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி வீரர்களாக கவின், கிஷோர் பிரஜித் , நிஜேஷ், பரிதி நாராயண்,அத்வைத் ஆகியோர் பங்கேற்றனர்.
14 வயது பரிவிற்கான சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சிபிஎஸ்இ வாரியத்திற்கு மேலும் ஒரு பதக்க எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.
கவின், கிஷோர் பிரஜித்,நிஜேஷ், பரிதி நாராயண், அத்வைத் ஆகிய 5 வீரர்களும் வேலம்மாள் பள்ளிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
![]()





