சென்னை, டிச.12:
இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு,வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் 11–ம் வகுப்பு பயிலும் 567 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பந்தர்கார்டனில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 120 மாணவர்களுக்கும், மார்க்கெட் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 198 மாணவிகளுக்கும், கொளத்தூர் பள்ளி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 249 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர். கௌஷிக், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஏ.நாகராஜன், ஸ்ரீதணி, கு.சாரதா, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





