செய்திகள்

52 கிலோ மீட்டர் நீலத்தில் ரூ. 8 ஆயிரம் கோடியில் ஐஸ்வாலை இணைக்கும் புதிய ரயில் பாதை

Makkal Kural Official

மோடி விரைவில் துவக்குகிறார்

ஐஸ்வல், செப். 1–

மிசோரம் மாநிலத் தலைநகரம் – ஐஸ்வாலை இணைக்கும் வகையில் பைரபி யிலிருந்து சாய்ரங் வரையிலான 52 கிலோமீட்டர் சவாலான அடர்ந்த வனப்பகுதியில் 51.38 கிலோமீட்டரில் சுமார் ரூ. 8, 071 கோடி மதிப்பிலான புதிய ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. இதை விரைவில் மோடி விரைவில் திறந்து வைக்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் மலைகளின் இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது மிசோரம். இம்மாநிலத்திற்கு 2014ஆம் ஆண்டு வரை அசாம் எல்லையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைராபிக்கு மட்டுமே ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ரயில் நிலையத்திலிருந்து மிசோரம் தலைநகரமான ஐஸ்வால் பகுதியை இணைக்கும் வகையில் சுமார் 51.38 கிலோமீட்டருக்கு உயரமான அடர்ந்த மலைகளுக் கிடையே அகல ரயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டம் கொண்டு வந்தது.

2014ஆம் ஆண்டு ரயில் பாதை அமைக்கும் பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பைராபியிலிருந்து சய்ரங் வரை அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதையில் கோர்டோக்கி, கவுன்புய், முல்ஹாங் ஆகிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது. சவாலான அடர்ந்த மலைப் பகுதிகள் நிறைந்த இந்த பகுதியில் 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் மற்றும் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிற்கு 48 சுரங்க பாதைகள் என ரூ. 8071 கோடிக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

2வது உயரமான பாலம்

இந்திய பாதையில் அமைந்துள்ள பாலங்களில் 114 மீட்டர் உயரமுள்ள சாய்ரங் பாலம் நாட்டில் இரண்டாவது உயரமான பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை கட்டமைப்பு மிகப்பெரிய சவால்களுக்கு இடையே நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து வட கிழக்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி நிலஞ்சன் தேப் கூறியதாவது:

இந்த ரயில் பாதை வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டன. இந்த பகுதியில் வருடத்தில் ஒன்பது மாதங்கள் மழை காலமாகும். சவாலான இப் பணியின் போது ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே முழு வீச்சில் பணிகள் நடைபெற்றன. பணிகளுக்கான கட்டுமான பொருட்களை அசாம், ஒடியா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தான் கொண்டு வர வேண்டி இருந்தது.

ஆரம்பத்தில் மிசோரம் மக்கள் இந்த பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிக்காததால், பீகார், ஒடியா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் படிப்படியாக உள்ளூர் வாசிகள் வேலைக்கு வரத் தொடங்கினர்.

4 ரயில் நிலையங்கள்

மலைகளுக்கிடையே ரயில் பாதை அமைக்கப்படுவதால், அதற்கான ஆயத்த பணிகளுக்கு சுமார் 200 கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்பட்டன. நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் ரயில் பாதையில் தடங்கள் இல்லாமல் இருக்க திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பைரவியிலிருந்து 4 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அங்குள்ள கிராம பகுதிகளை இணைக்க சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மிசோரம் மாநிலத்தை ரயில்வே பாதை வழியாக இணைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இந்த ரயில்பாதை திட்டத்தால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அதனால் சமூக, பொருளாதார வசதி ஏற்படும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

செலவும் அதிகம், பயண

நேரமும் அதிகம்…

இந்த ரயில்பாதை திட்டத்தால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அதனால் சமூக, பொருளாதார வசதி ஏற்படும்’’.

இந்த ரயில் பாதை திட்டம் குறித்து தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ் செல்வன் கூறுகையில், இந்தப் பகுதி மக்களுக்கு இதுவரை சாலை மார்க்கத்தில் பயண செலவும், பயண நேரமும் அதிகம் இருக்கும் நிலையில், இந்த புதிய ரயில் பாதையின் மூலம் செலவு குறையும், பயண நேரம் அதிக அளவில் குறையும். இந்த ரயில் பாதையின் மூலம் இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வர்த்தகர்கள் தங்களுடைய பொருட்களை குறைந்த செலவில் குறைந்த காலகட்டத்தில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல வசதியாக இருக்கும். இந்த பகுதி மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு இந்த ரயில்வே பாதை உதவியாக இருக்கும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *