ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டி
திருப்போரூர், டிச. 31–
ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கை மாவட்ட வீரர்கள் 41 தங்க பதக்கம், 8 வெள்ளி பதக்கங்களுடன் குழுகோப்பையை வென்று அசத்தினர்.
புதுச்சேரியில், மிஷன் ஒலிம்பிக் கேம்ஸ் அசோசியேஷன் இந்தியா சார்பில், ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் –2025 போட்டிகள் நடைபெற்றன. இதில் சிலம்பம், யோகா, கராத்தே ஆகிய போட்டிகளில் நாடு முழுதும் இருந்து, 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக நடந்த சிலம்பம் போட்டியில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஸ்ரீ வீர ஆஞ்நேயர் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில், கலைமாமணி குரு ரத்னா ஆசான் குமரேசன் தலைமையில் அவரின் மாணவர்களான 28 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர்.
சிலம்பத்தில் ஒன்றைகம்பு, இரட்டை கம்பு, வால்வீச்சு, மான்கொம்பு உள்ளிட்ட பிரிவு போட்டிகளில் பங்கேற்ற வீரர்– வீராங்கனைகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேற்கண்ட அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்ற 28 வீரர் – வீராங்கனைகள் 41 தங்கப்பதக்கம் வென்று முதலிடத்தையும், 8 வெள்ளிப்பதக்கம் வென்று இரண்டாமிடத்தையும் பிடித்தனர். போட்டியின் முடிவில், சர்வதேச அளவில் செங்கை மாவட்ட வீரர்– வீராங்கனைகள், தங்களது அசத்தலான ஆட்டத்தால், அதிக புள்ளிகளை வென்று குழுகோப்பையை கைப்பற்றினர்.
![]()





