ராணிப்பேட்டை, ஜன. 3:
ராணிப்பேட்டை கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தலா ரூ.25,936 மதிப்பீட்டிலான புல்நறுக்கும் கருவிகளை அரசின் 50 சதவீதம் மானியம் ரூ.12,96 வீதம் 40 பயனாளிகளுக்கு ரூ.5.18 இலட்சம் மதிப்பீட்டில் புல்நறுக்கும் கருவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
இந்த புல்நறுக்கும் கருவிகள் மூலம் புல், சோளம், கரும்புச் சக்கை போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டி கால்நடைகளுக்கு (மாடுகள், ஆடுகள், கோழிகள்) உணவாக அளிக்கலாம். சிறிய துண்டுகளாக வெட்டும்போது, விலங்குகளுக்கு தீவனத்தை ஜீரணிக்க எளிதாகிறது, ஊட்டச்சத்துக்கள் நன்றாக உறிஞ்சப்படும்.
பெரிய தீவனங்களை கால்நடைகள் சாப்பிடாமல் வீணாக்குவதைத் தடுக்கிறது. கைகளால் வெட்டுவதை விட இயந்திரம் மூலம் விரைவாகவும், அதிக அளவிலும் தீவனத்தை தயாரிக்க முடியும்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா தலைமை தாங்கினார். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத் துறை மரு.பிரசன்னா, துணை இயக்குநர் மரு.வெங்கடேசன், உதவி இயக்குநர் மரு.திருநாவுக்கரசு, ஐவிபிஎம் இயக்குனர் ரூத்சோபிலா, கால்நடை மருத்துவர் மரு.தணிகை வேலு, உதவி மருத்துவர்கள் மரு.சதிஷ்பாபு, மரு.லட்சுமணன், மரு.செந்தில் வளவன், மரு.சுகன்யா, மரு.ஓம் சிவ பிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
![]()





