சென்னை, ஆக. 2–
சென்னை – விழுப்புரம், சென்னை – வேலூர், கோவை – சேலம் ஆகிய 3 வழித்தடங்களில் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புக்கான சாத்திய கூறுகயை ஆய்வு செய்ய பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்ஆர்டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ரயில் நியமித்தது.
தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை நகரங்களை அவற்றின் அண்டை பிராந்திய மையங்களுடன் இணைக்கும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புக்காக (ஆர்ஆர்டிஎஸ்) 3 வழித்தடங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.
அதன்படி, சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் (170 கி.மீ.), சென்னை – காஞ்சிபுரம் – வேலூா் (140 கி.மீ.), கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் (185 கி.மீ.) ஆகிய வழித்தடங்களில் ஆா்ஆா்டிஎஸ் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 30 முதல் 60 நிமிஷங்களில் கடக்க முடியும். அதேபோல், சாலை போக்குவரத்தைவிட அதிக பயணிகளுடன் குறைந்த நேரத்தில் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த 3 வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஆலோசகராக ‘பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் நிறுவனத்தை’ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்நியமித்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பொது மேலாளர் (தெற்கு) எம்.ராபா்ட் ராஜசேகரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்
![]()





