செய்திகள்

‘2026ம் ஆண்டு அற்புதமாக அமையட்டும்’: ஜனாதிபதி முர்மு, மோடி வாழ்த்து

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன. 1–

இன்று (ஜனவரி 1) 2026ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

திர​வுபதி முர்​மு, ‘‘இந்த புத்​தாண்டு புதிய சக்தி மற்​றும் நேர்​மறை​யான மாற்​றத்​தின் அடை​யாள​மாக இருக்​கட்​டும். சுயபரிசீலனை மற்​றும் புதிய தீர்​மானங்​கள் எடுக்​க​வும் இது நல்ல வாய்ப்​பு. இந்​நாளில், நாட்​டின் வளர்ச்​சி, சமூக நல்​லிணக்​கம் மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்பு ஆகிய​வற்​றுக்கு நமது உறு​திப்​பாட்டை வலுப்​படுத்​து​வோம் என்று கூறியுள்ளார்.

‘‘2026 புத்​தாண்டு நமது வாழ்​வில் அமை​தி, மகிழ்ச்​சி, செழிப்​பைக் கொண்டு வந்​து, வலு​வான மற்​றும் செழிப்​பான இந்​தி​யாவை உரு​வாக்க புதிய சக்​தியை அளிக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.

மோடி

சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி கூறியிருப்பதாவது:–

“அனைவருக்கும் 2026 அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், நீங்கள் செய்யும் அனைத்திலும் நிறைவும் கிடைக்கட்டும். நமது சமூகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவப் பிரார்த்திக்கிறேன்”.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி

“அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்.” என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

கவர்னர் ர​வி

கவர்னர் ஆர்​.என்​.ர​வி வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘2026 விடியல், புதுப்​பிக்​கப்​பட்ட நம்​பிக்கை மற்​றும் வலுப்​படுத்​தப்​பட்ட உறு​தியை அறி​முகப்​படுத்​தட்​டும். நம் வாழ்​வில் மகிழ்ச்​சி, நல்ல ஆரோக்​கி​யம் மற்​றும் செழிப்பை நிரப்​பட்​டும். நிலை​யான மற்​றும் வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை உரு​வாக்க ஒன்​றாக முன்​னேறு​வோம்’’ என்று கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *