ராமநாதபுரம், செப். 19–
2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28–ந்தேதி ராமநாதபுரம் செல்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் செல்ல உள்ளார். 29ந் தேதி மாலை பரமக்குடிக்கு செல்லும் முதலமைச்சர் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார், ரோடு ஷோ நிகழ்ச்சியும் நடத்துகிறார்.
தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் முதலமைச்சர் அங்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியை நடத்தி மக்களை சந்திக்கிறார். பின்னர் இரவு ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் 30-ந் தேதி காலை ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
![]()





