செய்திகள்

114 வயது ‘மாரத்தான்’ வீரர் மரணத்துக்கு காரணமான கார் டிரைவர் கைது ; கனடாவில் வசிக்கும் 30 வயது இந்திய

Makkal Kural Official

ஜலந்தர், ஜூலை 16–

ஜலந்தர் – பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 14ந் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் 114 வயதான பிரபல மாரத்தான் வீரர் ஃபெளஜா சிங் பலியானார். இவரது மரணத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த 30 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் கனடா நாட்டில் வாழும் இந்தியர்.

‘‘டர்பன் குற்றவாளி’’ என அன்புடன் அழைக்கப்பட்ட ஃபெளஜா சிங் தனது சொந்த கிராமமான பியாஸ் பிண்டிற்கு அருகே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மோதி சம்பவ இடத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். ஜலந்தரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர், அன்று இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பஞ்சாபிலும் உலகளாவிய ஓட்டப்பந்தய சமூகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தது பஞ்சாப் காவல்துறை. விபத்து நடந்த 30 மணி நேரத்திற்குள், கனடாவைச் சேர்ந்த 30 வயது வெளிநாடு வாழ் நஇ்தியரான அம்ரித்பால் சிங் தில்லனை கைது செய்தது. கர்தார்பூரில் உள்ள தாசுபூர் கிராமத்தைச் சேர்ந்த தில்லன், 8 நாட்களுக்கு முன்பு தான் இந்தியா வந்திருந்தார்.

கண்காணிப்பு கேமராக்கள், சுங்கச்சாவடி காட்சிகள் தில்லனை அடையாளம் கண்டு கைது செய்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்விந்தர் சிங் விர்க் தெரிவித்தார்.

போக்பூர் காவல்நிலையத்தில் நடந்த விசாரணையில், தில்லன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். விபத்து நடந்தபோது தான் தனியாக இருந்ததாகவும், தனது மொபைல் போனை விற்றுவிட்டு போக்பூரிலிருந்து கிஷன்கரை நோக்கிச் சென்று .ொக்ணடிருந்ததாகவும் அவர் கூறினார்.

காரை அதிவேகமாக ஓட்டி வந்ததாகவும், விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்து பீதியடைந்து ஓடி விட்டதாகவும், இறந்தவர் பிரபலமான மாரத்தான் வீரர் ஃபெளஜா சிங் என்று பின்னர் தான் அறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தில்லன் மீது அதம்பூர் காவல் நிலையத்தில் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் கொலை அல்லாத மரணம் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

100 வயதில் …

ஏப்ரல் 1, 1911ல் பிறந்த ஃபெளஜா சிங், 89 வயதில் மாரத்தான் ஓடத் தொடங்கி, 100 வயதில் முழு மாரத்தான் ஓடிய உலகின் வயதான நபர் என்ற பெருமையைப் பெற்றார். அவரது ‘டர்பன் சூறாவளி’ என்ற சுயசரிதை நூல் 2011ல் வெளியானது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் தீபத்தை ஏந்திச் சென்றவர், 2015ல் பிரிட்டிஷ் எம்பயர் மெடல் (பிஇஎம்) விருதையும் பெற்றவர். அவரது இறுதிச் சடங்கு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *