பிரேசிலியா, ஜூலை 9–
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய “கிராண்ட் காலர் ஆப் நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சவுதர்ன் கிராஸ்” விருது வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 5 நாடுகள் பயணத்தின் ஒரு கட்டமாக பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ரியோ டி ஜெனீரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, பிரேசிலியா நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான அல்வோராடா மாளிகையில் 114 குதிரைகள் புடைசூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கட்டித்தழுவி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான வழிவகைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பிரேசில் அதிபர் மற்றும் பிரதமர் முன்னிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய “கிராண்ட் காலர் ஆப் நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சவுதர்ன் கிராஸ்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமும், தூதரக ரீதியாகவும் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார். தீவிரவாத எதிர்ப்பு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கிடையாது என்றும் பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
![]()





