செய்திகள்

11-ந் தேதி பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்

Makkal Kural Official

புதுடில்லி, நவ.9-

பிரதமர் மோடி வரும் நவம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் பூடான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நவம்பர் 11ம் மற்றும் 12ம் தேதிகளில் பூடானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது. அப்போது, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா. நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

பின்னர் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார். பூடானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

லும் பிரதமர் ஷெரிங் தோப்கேவையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.

பிரதமர் மோடி கடைசியாக மார்ச் 2024ல் பூடானுக்கு விஜயம் செய்தார், அப்போது அவருக்கு பூடானின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ வழங்கப்பட்டது. இதைப் பெற்ற முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். பிரதமர் மோடி இந்த விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணித்தார், இது 140 கோடி குடிமக்களுக்கும் சொந்தமானது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *