செய்திகள்

109வது பிறந்த நாள் எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை

Makkal Kural Official

சென்னை, ஜன.17–

அண்ணா தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா சிலைக்கும் எடப்பாடி மலை அணிவித்து வணங்கினார்.

அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா தி.மு.க. கட்சி கொடியை எடப்பாடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

109 கிலோ கேக்

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த 109 கிலோ எடை கொண்ட ராட்சத கேக்கினை வெட்டி எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு சேலை வழங்கி, தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

அன்னதானம்

நிறைவாக, தலைமைக் கழக வளாகம் எதிரில், எடப்பாடி பழனிசாமி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவருமான ஆதிராஜாராம் ஏற்பாட்டின்பேரில், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி, 119 கிழக்கு வட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் மற்றும் மகளிருக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களும் அலங்கரித்து வைக்கப்பட்டு தேங்காய் உடைத்து ஊதுபத்தி ஏற்றி வழிபட்டனர்.பல்வேறு இடங்களில் அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆரின் படப்பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, பொன்னையன், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, தம்பிதுரை, என்.தளவாய்சுந்தரம், டி.ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம் எம்.பி, ப.மோகன், என்.ஆர்.சிவபதி, ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி., கமலக்கண்ணன்,

பா.பென்ஜமின், மற்றும் எஸ்.ஆர்.விஜயகுமார், கோவை சத்தியன், டாக்டர் ஜெயவர்த்தன், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், ஆதி ராஜாராம், கே.பி.கந்தன், திருமங்கலம் மோகன், எம்.வி.அசோக், மாதவரம் மூர்த்தி, அலெக்சாண்டர், பி.வி.ரமணா, வாலாஜாபாத் கணேசன், சோமசுந்தரம், டி.கே.எம்.சின்னையா, அப்துல் ரஹீம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், அமைப்பு செயலாளர் ராயபுரம் ஆர்.மனோ, எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் பி.சின்னையன், வாலாஜாபாத் கணேசன், தனபால் எம்.பி.,

ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாணவர் அணி துணை செயலாளர் ஆ.பழனி, செய்தி தொடர்பாளர் ஒய்.ஜவஹர் அலி, மாநகர போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் இ.எஸ்.சதீஷ்பாபு, ராணி அண்ணா நகர் த.கோவிந்தன், வேளாங்கண்ணி,

பகுதி செயலாளர்கள் முகுந்தன் கோபால், சேப்பாக்கம் சிவா, இம்தியாஸ் லட்சுமி நாராயணன், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர் இ.சி.சேகர், வழக்கறிஞரும், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளருமான ஆர்.சதாசிவம், வட்ட செயலாளர் கே.துளசி, மயிலை டி. ஜெயச்சந்திரன், வி.எஸ். வேல் ஆதித்தன், பி.சந்தான கிருஷ்ணன், உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆரின் 108-–வது பிறந்த நாளையொட்டி, சாலையின் இருமருங்கிலும் கழகக் கொடித் தோரணங்கள், வரவேற்புப் பதாகைகள் அழகுற அமைக்கப்பட்டு, தொண்டர்கள் கழகக் கொடிகளை தங்கள் கைகளில் எந்திய வண்ணம், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்லி எழுச்சிமிகு வரவேற்பை அளித்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *