சென்னை, செப்.1–
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
கடந்த 6-ந்தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை மீண்டும் தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்து காணப்பட்டது. அதன் பின்பு கடந்த 21ந்தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது.
அந்த வகையில் கடந்த சனிக்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 9,620 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 76,960 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
கடந்த 21ந்தேதியில் இருந்து அதாவது கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.390-ம், சவரனுக்கு ரூ.3,120-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.78 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
![]()





