புதுடெல்லி, ஜூலை 18–
கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.
குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ. 37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, அவருக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:–
எனது சகோதரியின் கணவரை கடந்த 10 ஆண்டுகளாக இந்த அரசு வேட்டையாடி வருகிறது. தற்போதைய குற்றப்பத்திரிகை அந்த வேட்டையின் தொடர்ச்சியாகும். ராபர்ட், பிரியங்கா மற்றும் அவர்களது குழந்தைகள், மீண்டும் அரசியல் ரீதியில் தூண்டப்பட்ட அவதூறு மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில், நான் அவர்களுக்கு துணை நிற்கிறேன். அவர்கள் அனைத்து விதமான துன்புறுத்தல்களையும் தாங்கும் அளவுக்கு தைரியமானவர்கள் என்பதை நான் அறிவேன். இறுதியாக உண்மை வெல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.
![]()





