செய்திகள்

ஹானா ஜோசப் மருத்துவமனை ரூ.42 கோடிக்கு பங்குகள் வெளியீடு

Makkal Kural Official

மும்பை, ஜன. 21:

மதுரையைச் சேர்ந்த ஹானா ஜோசப் மருத்துவமனை, தன் விரிவாக்க திட்டங்களுக்காக பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிடுகிறது. மொத்தம் 60 லட்சம் பங்குகளை வெளியிட்டு ரூ.42 கோடி நிதி திரட்ட உள்ளது. இந்த பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 10 முக மதிப்பு கொண்டது. ரூ.67 முதல் ரூ.70 வரை ஒரு பங்குக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்கிறது.

இந்த மருத்துவமனை நரம்பு மண்டல சிகிச்சை இருதய ஆபரேஷன் மற்றும் விபத்து சிகிச்சையில் அதிநவீன வசதிகள் கொண்டு முன்னணி மருத்துவமனையாக திகழ்கிறது.

பங்குள் வெளியீடு நாளை (22ந்தேதி தேதி) துவங்கி 27ந் தேதி முடிவடைகிறது. இந்தப் பங்குகள் விலை மும்பைபங்கு மார்க்கெட்டில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் பங்கு லிஸ்டிங் செய்யப்படும் என்று சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோசஸ் ஜோசப் அருண்குமார் தெரிவித்தார்.

மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:–

‘‘பங்கு வெளியீடு மூலம் பெறப்படும் நிதி பல்வேறு ரக மருத்துவ சிகிச்சைகளை ஒருங்கிணைந்த அமைப்பாக வசதி செய்ய இந்த விரிவாக்கம் உதவும். இதன் மூலம் இதன் வெளி நோயாளிகள் வருகையை அதிகரிக்கவும் உள் நோயாளிகள் கூடுதல் பேருக்குசிகிச்சை செய்ய ஏதுவாக வசதிகளை விரிவாக்க வழி பிறக்கும். பங்கு வெளியீடுமூலம் இதன் வருமானம் குறுகிய காலத்திலும் நீண்ட கால அடிப்படையிலும் பலன் அளிக்க உள்ளது.

இந்த பங்கு வெளியீடு மூலம் பெறப்படும் நிதி மூலதன செலவாக புற்றுநோய் சிகிச்சைக்கேற்ற அதிநவீன ஆங்காலஜி ஸ்கேன் மையம் மற்றும் இதன் கார்ப்பரேட் செயல்பாடுகளை நவீனப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.

ரூ.77.50 கோடி வருவாய்

கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் இந்த மருத்துவமனை ரூ.77.53 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் மொத்த லாபம் 26.47% ஆகவும் நிகர லாபம் வருவாய் 9.3% ஆகவும் உள்ளது. 2025 செப்டம்பர் 30 தேதி முடிவில் இந்த மருத்துவமனை வருவாய் ரூ.42.54 கோடியாகவும் இதன் மொத்த லாபம் 27.38% ஆகவும், நிகர லாபம் 12.03%ஆகவும் உள்ளது. இந்த பங்கு வெளியீடு நிர்வாகிகளாக கேப்பிட்டல் ஸ்கொயர் அட்வைசர்ஸ் நிறுவனம் செயல்படுகிறது.

ஹானா ஜோசப் மருத்துவமனை மூளை நரம்பியல் சிகிச்சை மற்றும் இருதய ஆபரேஷன் துறையில் முன்னணியில் உள்ளது. நரம்பு மண்டலம் மற்றும் மனநலம் மற்றும் விபத்து சிகிச்சையில் 2008ஆம் ஆண்டு முதல் சிறப்பாக மதுரையில் செயல்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் இது தனி லிமிடெட் நிறுவனமாக உருமாறியது. தொடர்ந்து நவீன மருத்துவ சிகிச்சை. சிறப்பான துல்லியமான ஆபரேஷன் காரணமாக நோயாளிகள் வருகை அதிகரித்தது இதன் சிறப்பான சிகிச்சை போன்றவற்றால் இது மதுரை நகரம் மற்றும் தென் பகுதிக்கும் முன்னணி மருத்துவமனையாகத் திகழ்கிறது.

நரம்பியல் ஸ்கேன் துறையில்…

நரம்பியல் ஸ்கேன் துறையில் அனைத்து வசதிகளும் உள்ள தலைசிறந்த மருத்துவமனையாக இது உருவாகியுள்ளது. நோயாளிகள் வருகை அதிகமானாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 2020 ஆண்டில் புதிய பிரம்மாண்ட கட்டுமானத்தில் இந்த மருத்துவமனை செயல்படத்

துவங்கியது. இத்துடன் இருதய சிகிச்சை செய்ய ஏதுவாக கேத் லேப் வசதி நிறுவப்பட்டுள்ளது. இருதய ஆபரேஷனுக்கு தேவையான நவீன ஆப்ரேஷன் தியேட்டர்கள் நிறுவப்பட்டு பல்வேறு சிக்கலான இருதய ஆபரேஷன்கள் இங்கு எளிதாக செயல்படுத்தி நோயாளிகளின் நம்பிக்கையை பெற்றது.

இந்த மருத்துவமனையில் நரம்பியல் மூளை மற்றும் முதுகு தண்டுவட சிகிச்சை வசதிகள் மற்றும் இருதய ஆபரேஷன் வசதிகள் மனநல சிகிச்சை வசதிகள் உலக தரத்தில் வழங்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் மேல்பட்ட படிப்பு ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது’’

இவ்வாறு அவர் கூறினார்.

இம்மருத்துவமனை மதுரையில் சிந்தாமணி டோல்கேட் அருகே மதுரை தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 9 மாத ஆண் குழந்தைக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவருக்கு மூளையில் ரத்த அடைப்பை நீக்கி சிறப்பான விருதை பெற்றது.

பல்வேறு மருத்துவ துறை ஆய்வு இதழ்களில் சிறந்த மருத்துவமனையாக ஹானா ஜோசப் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டு பாராட்டு வழங்கி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *