தாம்பரம், ஜன.13-
தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மாபெரும் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார்.
ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் – தொழில்நுட்ப மன்றம் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவர்கள் பங்கேற்று, 800-க்கும் மேற்பட்ட வியக்கத்தக்க தங்கள் அறிவியல் படைப்புகளை (ரோபோடிக்ஸ், நவீன விவசாய முறைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீர் மேலாண்மை, உற்பத்தித் துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைப்புகளில்) காட்சிப்படுத்தினார்கள்.
சாய்பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியின் சிறப்பு விருந்தினராக நாஸ்காம் இயக்குநர், மாற்றம் பவுண்டேஷன் இணை நிறுவனர் உதயகுமார், தென் பிராந்திய பி.ஐ.எஸ் துணை மேலாண்மை இயக்குநர் கணேஜியா, விஞ்ஞானி தயானந்த், காஞ்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனைவர் நளினி, மாணவ ரத்னா முனைவர் கார்த்திக் வேலு பங்கேற்று அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர்.
மாணவர்களின் படைப்பாற்றலையும் அறிவியல் சிந்தனையையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்த கண்காட்சி இது. சிறந்த படைப்புகளை உருவாக்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஸ்ரீசாய்ராம் கல்வி குழுமத்தின் சார்பில் ரூபாய் 20 லட்சம் மதிப்புடைய பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கி வாழ்த்தினார்.
கல்லூரி முதல்வர் ஜெ. ராஜா, ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே. பழனிகுமார், இயக்குநர் டாக்டர் ஆர். பழனியாண்டி, முதன்மை தகவல் அதிகாரி கே. நரேஷ் ராஜ், முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ஆர். சதீஷ்குமார், கல்லூரி மேலாண்மை துறை தலைவர் க. மாறன், புலத் தலைவர் எல். அருணாச்சலம், சி.ஆர்.ரெனிராபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]()





