செய்திகள்

ஸ்பைஸ்ஜெட் விமான என்ஜினில் கோளாறு; கொல்கத்தாவில் அவசரமாக தரை இறக்கம்

Makkal Kural Official

கொல்கத்தா, நவ. 10–

என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பையில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், கொல்கத்தாவில் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது.

மும்பை விமான நிலையத்தில் இருந்து 188 பேருடன் மும்பையில் இருந்து நேற்று மாலை 7.10 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக விமானம் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது, அதன் என்ஜினில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனை உணர்ந்த விமானி, விமானக் கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன், கொல்கத்தா விமான நிலையத்தில் அவசர கால தரை இறக்கத்திற்கான எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகளும், விமானத்தை பத்திரமாக தரை இறக்குவதற்காக உஷார் நிலையில் இருந்தனர். அதன்படி, இரவு 11.38 மணியளவில் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அனைத்து பயணிகள், விமானிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *