செய்திகள்

ஸ்டாலின் தலைமையில் 6–ந்தேதி அமைச்சரவைக் கூட்டம்

Makkal Kural Official

சென்னை, டிச. 31–

மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜனவரி 6ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்என் ரவியின் உரையுடன் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி குழு முதலமைச்சரிடம் அளித்த இறுதி அறிக்கை குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக வரும் பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே, ஆளும் திமுக அரசு 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *